அடர்ந்த காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் ட்ரிப்… சமீரா ரெட்டி பகிர்ந்த த்ரில் வீடியோ !
மும்பை : நடிகை சமீரா ரெட்டி, அடர்ந்த காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் பதிவுகளை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சிறந்த படமாக
இந்தியில் அறிமுகமாகிக் கலக்கிக் கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி தென்னிந்தியாவிற்கு நரசிம்ஹுடு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றார். சமீரா ரெட்டியின் திரைவாழ்க்கையில் இன்று வரை பெயர் சொல்லும் வகையில் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வாரணம் ஆயிரம் இருக்க அதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
Recommended Video

நடிப்புக்கு முழுக்கு
வாரணம் ஆயிரம் , அசல்,வெடி,நடுநிசி நாய்கள்,வேட்டை என தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் மிகக் குறைவே என்றாலும் அனைவராலும் பாரபட்சம் பார்க்காமல் ரசிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்த இவர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். கடைசியாக வரதநாயகா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார்.

குழந்தைகளுடன்
மீண்டும் படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க ஒட்டுமொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டில் குழந்தைகளுடன் செம ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது அந்த வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மரத்தில் தொங்கிய
தனது மகள் நைரா செய்யும் சேட்டைகளை அடிக்கடி பதிவிட்டு லைக்குகளை பெற்று வருகிறார். தற்போது இவர், தனது கணவர் மற்றும் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்று இயற்கையோடு இணைந்தும், குழந்தைகளுடன் ஆட்டம் போட்டும், மரத்தில் தொங்கியும் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி உள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லைக்குகளையும் அள்ளி வருகிறார்.


Click it and Unblock the Notifications











