ஓப்ரா வின்ப்ரேக்கு புடவையை பரிசாகத் தந்த நடிகை சமீரா!

வின்ப்ரேயின் தீவிர ரசிகைகளுள் ஒருவர் சமீரா. அவர் இந்தியாவுக்கு வந்ததையொட்டி, பரமேஷ்வர் கோத்ரெஜ் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற சமீரா, அங்கு தனது மனம் கவர்ந்த நாயகியான ஓப்ராவுடன் பேசி மகிழ்ந்தார்.
ஓப்ராவை சந்தித்தது குறித்து பின்னர் சமீரா கூறுகையில், "சென்னையில் வேட்டை படத்தின் புரமோஷன் பணிகளை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஓப்ரா வின்ப்ரே வருவதை அறிந்ததும், என நிகழ்ச்சிகளைக் கூட ஒத்தி வைத்துவிட்டேன்.
அவரைச் சந்தித்தபோது, என்னிடம் மிக இயல்பாக எளிமையாகப் பழகினார். நான் கட்டியிருந்த புடவை அவருக்குப் பிடித்துவிட்டது. எத்தனை அழகான உடை இது என அடிக்கடி சொல்லி, தொட்டுப்பார்த்து மகிழ்ந்தார். அவருக்கும் அதேபோன்ற புடவையை தர விரும்பினேன். ஆரம்பத்தில் அவர் மறுத்தார். ஆனால் அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டேன்.
நான் கட்டியிருந்தது சாந்தனு - நிகில் வடிவமைத்த டிசைனர் புடவை. அதே போல மேலும் ஒன்றை டிசைன் செய்யுமாறு கூறிவிட்டேன். அதை அவருக்கு அனுப்பவும் சொல்லிவிட்டேன்.
நான் ரொம்ப அழகாக இருப்பதாக ஓப்ரா சொன்னபோது, என் வாழ்க்கையின் பயனை அடைந்ததுபோல பரவசப்பட்டேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











