நடிகர் விஷால் படத்தில் நடிக்கிறேனா..? அதுல உண்மையில்லை.. பிரபல முன்னாள் ஹீரோயின் திடீர் மறுப்பு!

By

சென்னை: விஷால் படத்தில் தான் நடிக்கவில்லை என்று பிரபல நடிகை மறுத்துள்ளார்.

'சக்ரா' படத்தை அடுத்து விஷால் நடிக்கும் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படம், ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று விஷால் கூறியிருந்தார்.

இன்னும் முடிவாகவில்லை

இன்னும் முடிவாகவில்லை

அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. எந்த ஓடிடி தளம் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கிடையே, ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இதற்கு முன், அரிமாநம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா

எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா

இந்தப் படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா, வில்லனாக நடிக்கிறார். விஷால் ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள மிருணாளினி, தமிழில் எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா உ ட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இது வித்தியாசமான ஆக்‌ஷன் படம் என்று கூறப்படுகிறது.

படங்களில் நடிக்கவில்லை

படங்களில் நடிக்கவில்லை

இந்தப் படத்தில் நடிகை சமீரா ரெட்டி முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. நடிகை சமீரா, தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை உட்பட சில படங்களில் நடித்துள்ளார். விஷாலுடன் வெடி படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள இவர், திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

அதில் உண்மையில்லை

அதில் உண்மையில்லை

அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும், நடிகை சமீரா, விஷால் படத்தில் தான் நடிப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார். அது தவறான தகவல் என்றும் தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

இயக்கி நடிக்கும் விஷால்

இயக்கி நடிக்கும் விஷால்

இந்தப் படத்துக்குப் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது.முதலில் இதை மிஷ்கின் இயக்குவதாக இருந்தது ,பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மிஷ்கின் விலகினார். இதனால் விஷாலே தனது பிலிம்பேக்டரி சார்பில் தயாரித்து இயக்கி நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X