சமீரா ரெட்டி சினிமாவிற்கு ரெஸ்ட்... கைக் குழந்தையை கொஞ்ச மட்டுமே டைம் இருக்கு

Recommended Video

Watch Video : Sameera reddy joys with second baby

மும்பை: நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது குட்டிக் குழந்தையுடன் கொஞ்சும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மீண்டும் நடிக்க வருவது பற்றி குறிப்பிட்ட அவர் இப்போதைக்கு அதற்கு அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டில் வெளியான மைனே தில் துஜ்கோ தியா எனும் இந்தி திரைப்படம் மூலம் அறிமுகமாகி திரையுலகிற்குள் நுழைந்தவர் சமீரா ரெட்டி. பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

Sameera Reddy Joys with Second baby photo viral

கடந்த 2003ஆம் ஆண்டில் வெளியான தர்ணா மனா ஹை, 2004ஆம் ஆண்டில் வெளியான முசாஃபிர், 2005ஆம் ஆண்டில் வெளியான ஜெய் சிரஞ்சீவா போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்.

தமிழில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்திலும் பின்பு வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் போன்ற படங்கள் மூலம் சூர்யா, விஷால், மாதவன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஹான்ஸ் வர்தே எனும் மகன் இருக்கிறார். இந்த நிலையில் சமீரா ரெட்டி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். அவரின் அந்த சின்ன தேவதைக்கு நைரா என்று பெயரிட்டுள்ளார்.

அவர் கருவுற்றிருக்கும் போது நீச்சல் குளத்தின் அடியில் நீந்துவது போல் பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவந்தார். அந்த புகைப்படங்களை கமெண்ட் செய்தவர்களுக்கும் சரியான ஒரு பதிலடியை கொடுத்தார்.

அதே மாதிரி, பிரசவத்திற்கு பின்பு தான் கொஞ்சம் குண்டாக இருப்பதாக யாராவது கமெண்ட் செய்தாலும், அதைப் பற்றிய கவலை துளியும் தனக்கு கிடையாது என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டாலும், இப்போதைக்கு அதற்கு அவசரமில்லை, குழந்தை வளர்ந்த பெரியவள் ஆன பிறகே நடிக்க வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது தன் இரண்டு மாத குட்டி தேவதையுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பெற்றோரின் அன்பும் கடவுளின் ஆசிர்வாதமும் என்றும் அந்த தேவதைக்கு கிடைக்கட்டும். சமீரா ரெட்டிக்கு எங்களது வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X