வாரிசு நடிகருடன் தொடர்பு என்ற பேச்சால் என் கெரியர் நாசமாப் போச்சு: நடிகை குமுறல்
சென்னை: நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் தொடர்பு என்று பேச்சு கிளம்பியதால் தனது கெரியர் பாதிக்கப்பட்டதாக சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது சினிமா கெரியர் பற்றி அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

ஜூனியர் என்.டி.ஆர்.
நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆரை. தவிர வேறு எந்த ஹீரோவையும் தெரியாது. அதனால் அவருடன் பேசிப் பழகினேன். எங்களுக்கு இடையே வெறும் நட்பு தான் என்றாலும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக வதந்தி பரப்பிவிட்டார்கள். அந்த வதந்தியால் தெலுங்கு திரையுலகில் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

பிரச்சனை
நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வந்தோம். ஆனால் மக்களோ எங்களை பற்றி வேறு விதமாக தொடர்ந்து பேசினார்கள். சமீராவுக்கும்-ஜூனியர் என்.டி.ஆருக்கும் இடையே தொடர்பாம் என்று பேசப்பட்டதால் என் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் தான் தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியேறினேன்.

வளர்ச்சி
ஜூனியர் என்.டி.ஆர். எனக்கு நல்ல நண்பர். அவரின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படாத ஹீரோ அவர். அவர் தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார் சமீரா ரெட்டி. 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமீரா ரெட்டி பிகினி அணிந்து நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதை பார்த்து சிலர் பாராட்டினார்கள், சிலர் விளாசினார்கள்.

ராஜமவுலி
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா நடித்து வரும் மெகா பட்ஜெட் படமான ஆர்.ஆர். ஆருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பாகுபலி 2 படத்தை அடுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ஆர்.ஆர். ஆர். படத்தை 2020ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











