சமீரா-சூர்யா-கெளதம் மேனன்

By Staff
Click here for more images

கெளவும் மேனன் இயக்கும் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர ஜெனீலியா புக் செய்யப்பட்டு பின்னர் புக்கிங் கேன்சலாகி, தற்போது பாலிவுட்-டோலுவுட் நாயகி சமீரா ரெட்டி புக் ஆகியுள்ளார்.

காக்க காக்க படத்திற்கு பிறகு வாரணம் ஆயிரம் படத்தில் கெளவுதம் மேனனுடன் இணைகிறார் சூர்யா. இந்தப் படம் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க வேண்டியது.

ஆனால், சூர்யா-மேனன் இருவருக்குமிடையே பிரச்சனை வந்ததால் கைவிடப்பட்டது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாகிவிட்டனர். இருவரும் தலா ஒரு ஹிட் படத்தையும் கொடுத்துவிட்டனர்.

இந் நிலையில் இருவரும் இடையே மீண்டும் ராசியாகி, வாரணம் ஆயிரத்தை மீண்டும் தொடர முடிவு செய்தனர். ஆனால், இந்த முறை ஹீரோயின் குழப்பம் ஏற்பட்டது. புதுமுகம், த்ரிஷா, ஆசின் என ஆரம்பித்து கடைசியில் ஹரிணி என்ற ஜெனிலியாவை இறுதி செய்தனர்.

ஆனால் என்ன ஆனதோ, வாரணம் ஆயிரம் படத்திலிருந்து எந்தவொரு காரணமும் சொல்லாமல் ஜெனிலியாவை தூக்கிவிட்டார்களாம்.

இப்போது டோலிவுட் (அதாங்க தெலுங்கு), பாலிவுட்டில் கவர்ச்சியில் கலங்கடித்து வரும் சமீரா ரெட்டி புக் செய்யப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு பெரும்பாலும் அமெரிக்காவில் தான் நடைபெறவுள்ளதாம். அவரிடம் கால்ஷீட் வாங்கியவுடனே ஸ்கிரிப்டை கையில் கொடுத்து சமீரா ரெட்டியை அமெரிக்காவுக்கு பேக் செய்து கொண்டு போய்விட்டாராம் மேனன்.

சமீராவுக்கு படத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவி வேடமாம். நல்லா படிங்க.. ஸாரி (கவர்ச்சியோடு) நல்லா நடிங்க

More from Filmibeat

Read more about: sameera reddy varanam ayiram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X