யாரும் பயந்துடாதீங்க.. அது நம்ம சமீரா ரெட்டி தான்.. லாக் டவுனில் குழந்தைகளுடன் செம அட்டகாசம்!
சென்னை: முகத்தை அழகுப்படுத்த நடிகை சமீரா ரெட்டி போட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்கை பிடித்து பிய்த்து இழுக்கும் அவரது மகளின் க்யூட் வீடியோ வைரலாகி வருகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னா கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.
தொடர்ந்து, விஷால், அஜித், மாதவன் என பிரபல நடிகர்களுடன் சில படங்களில் நடித்த சமீரா ரெட்டி, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

5 படங்கள்
இந்தியில் அறிமுகமான சமீரா ரெட்டி, தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமான அவர், அஜித்தின் அசல், விஷாலின் வெடி, கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான நடுநிசி நாய்கள் மற்றும் ஆர்யா, மாதவன் நடிப்பில் வெளியான வேட்டை என மொத்தம் 5 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தொழிலதிபருடன்
கடந்த 2013ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான வரதநாயகா படத்தில் கடைசியாக நடித்த சமீரா ரெட்டி, தொழிலதிபரான அக்ஷய் வர்தாவுடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். சமீரா ரெட்டிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு தான் நைரா என்னும் பெண் குழந்தை சமீரா பெற்றெடுத்தார்.

குழந்தைகளுடன்
சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியிருந்தாலும், தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதுமே தனது ரசிகர்களுக்காக ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் சமீரா ரெட்டி. இந்த லாக் டவுன் நேரத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
View this post on InstagramA post shared by Sameera Reddy (@reddysameera) on
பேய் மாதிரி
வீட்டில் இருந்தாலும், நடிகைகள் மேக்கப் போடுவதை நிறுத்த மாட்டார்கள் என்பதற்கு சமீரா ரெட்டியும் ஒரு உதாரணமாகவே இருக்கிறார். லாக் டவுன் நேரத்திலும் ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொண்டு பேய் மாதிரி குழந்தையை தூக்கி வைத்து அந்த வீடியோவில் சமீரா ரெட்டி கொஞ்சி விளையாடுகிறார். வீட்டிலேயே உனக்கு மேக்கப் ஒரு கேடா என்பது போல அந்த குழந்தை அவரது மேக்கப்பை பிச்சு எடுப்பது செம க்யூட்.
View this post on InstagramA post shared by Sameera Reddy (@reddysameera) on
மகனுக்கு போட்டியாக
மேலும், தனது மகனுடன் போட்டியாக தானும் இந்த லாக் டவுன் நேரத்தில் குழந்தையாக மாறிவிட்டதாக கூறியபடியே நடிகை சமீரா ரெட்டி, பெயிண்ட் பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், கைகளிலேயே வண்ணங்களை தடவிக் கொண்டு, பேப்பரில் மகனுக்கு போட்டியாக ஓவியம் வரையும் அட்டகாசமான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











