Just In
- 3 min ago
தொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்!
- 12 min ago
துபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா?
- 31 min ago
'இப்போதைய தேவை அதுதான்..' 140 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் ராகிணி.. தந்தை மகிழ்ச்சி!
- 42 min ago
டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்!
Don't Miss!
- News
எல்லாம் சரியாக நடந்தால்.. டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு இப்படி இருக்கும்! மிரளவைக்கும் விவசாயிகள்!
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Sports
இந்தியாவோட மோத தயாராகும் இங்கிலாந்து அணி... பர்ஸ்ட் 2 போட்டிக்கான அணி அறிவிப்பு
- Lifestyle
வாஸ்து சாஸ்திரத்தின் படி விரைவில் திருமணமாக உங்க வீட்டில் இந்த மாற்றங்களை கண்டிப்பாக செய்யணுமாம்...!
- Finance
வாரத்தின் இறுதி நாளில் செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கெளதம் மேனன் நாயகிகளின் 'கெளரவ' மோதல்!
கெளதம் மேனனின் நாயகிகள் இருவருக்கு இடையே பனிப்போர் மூண்டுள்ளதாம். யார் பெரியவர், யாருக்கு கிராக்கி அதிகம் என்பதில் இந்த மோதல் மூண்டு புகைச்சல் அதிகமாகியுள்ளதாம்.
கெளதம் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சமீரா ரெட்டி. அதேபோல கெளதம் மேனன் கைப்பிடித்து தூக்கி விட்டவர் சமந்தா. சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா. அதேபோல தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா.
நடுநிசி நாய்கள் படத்தில் சமீரா நாயகியாக நடித்தார். அதேசமயம், சமந்தாவையும் ஒரு முக்கிய வேடத்தி்ல கெளரவ வேடத்தில் நடிக்க வைத்தார் கெளதம் மேனன். அதாவது தனித் தனியாக இயக்கிய இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் சேர்த்து இயக்கினார் கெளதம். அங்குதான் புகைச்சலாகி விட்டதாக கூறுகிறார்கள்.
சமந்தா மீதுதான் கெளதம் மேனன் அதிகம் அக்கறை காட்டுவதாக நினைக்கிறாராம் சமீரா ரெட்டி. தன்னை தற்போது ஓரம் கட்டுவது போல கெளதம் மேனன் நடந்து கொள்கிறார். மாறாக சமந்தாவுக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கிறார் என்று குமுறுகிறாராம் சமீரா.
சமீரா தற்போது வேறு வேறு படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம், தொடர்நது கெளதம் மேனன் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சமந்தா. இதுவும் கூட சமீராவுக்கு புகைச்சலைக் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
தற்போது சமந்தா தனது புதிய படங்களை ஒப்புக் கொள்வதிலிருந்து, யாருடன் ஜோடி போடுவது என்பதிலிருந்து, எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்பது வரை அனைத்துக்கும் கெளதம் மேனனிடம் ஆலோசனை கேட்பதாக தெலுங்குத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
இப்படி சமந்தா ஒருபக்கம் படு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாலும், வெடி போன்ற சூப்பர் டூப்பர் பிளாப் படங்களை தான் கொடுத்துக் கொண்டிருப்பதாலும் டென்ஷனாக இருக்கிறாராம் சமீரா.
இந்த சண்டை எங்கு போய் முடியும், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் இரு மொழித் திரைத்துறையினரும் காத்துள்ளனர்.