ஆமாங்க அது நானே தான்.. சமீரா ரெட்டி வெளியிட்ட பழைய புகைப்படம்.. வாய்பிளந்த ரசிகர்கள் !

சென்னை : வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை சமீரா ரெட்டி இப்பொழுது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாண்டவாறு பொழுதை கழித்து விட சமீரா ரெட்டி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போது எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ளார் இது இப்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கிலும் வாய்ப்புகள்

தெலுங்கிலும் வாய்ப்புகள்

பிரபல மாடல் அழகியாக வலம் வந்த சமீரா ரெட்டி 2002 ஆம் ஆண்டு வெளியான "மெயின் தில் துக்கோ தியா" என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வர தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

கனவுக் கன்னியாக

கனவுக் கன்னியாக

எனினும் தமிழுக்கு தாமதமாகவே அறிமுகம் செய்யப்பட்ட சமீரா ரெட்டி சூர்யா-கௌதம் மேனன் வெற்றிக் கூட்டணியில் உருவான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதோடு முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறினார்.

செட்டிலாகிவிட்டார்

செட்டிலாகிவிட்டார்

வாரணம் ஆயிரம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி கடைசியாக வேட்டை திரைப்படத்தில் நடித்துவிட்டு சென்றவர் திருமணமாகி அப்படியே செட்டிலாகிவிட்டார்.

அனைவரின் பாராட்டுகளை

அனைவரின் பாராட்டுகளை

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு அனைவரின் பாராட்டுகளையும் அன்பையும் பெற்று வருகிறார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு

பத்தாண்டுகளுக்குப் பிறகு

இந்தநிலையில் பத்தாண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக கலக்கி கொண்டிருந்த பொழுது எடுத்த ஸ்டன்னிங் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் சமீரா ரெட்டி அதில் குட்டி டவுசருடன் வெறும் பிளேசர் மட்டும் அணிந்து கொண்டு உள்ளே எதுவும் அணியாமல் படு கவர்ச்சியாக கிறங்க வைக்கும் பார்வையில் பார்க்கும் அனைவரையும் பற்றவைக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்தை இப்பொழுது பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X