பாய் கட் ஹேர் ஸ்டைலில் ச்சப்ப்பி கேர்ள்....நம்பவே முடியாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!
மும்பை : நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழில் வாரணம் ஆயிரம, வெடி, நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் பதிவுகளை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நிலையில் அரிய சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

சிறந்த படமாக
இந்தியில் அறிமுகமாகிக் கலக்கிக் கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி தென்னிந்தியாவிற்கு நரசிம்ஹுடு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றார். சமீரா ரெட்டியின் திரைவாழ்க்கையில் இன்று வரை பெயர் சொல்லும் வகையில் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வாரணம் ஆயிரம் இருக்க அதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

நடிப்பதை குறைத்து
வாரணம் ஆயிரம் , அசல்,வெடி,நடுநிசி நாய்கள்,வேட்டை என தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் மிகக் குறைவே என்றாலும் அனைவராலும் பாரபட்சம் பார்க்காமல் ரசிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். கடைசியாக வரதநாயகா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார்.

குழந்தைகளுடன் என்ஜாய்
மீண்டும் படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க ஒட்டுமொத்தமாக சினிமாவிற்கும் முழுக்கு போட்டுவிட்டு வீட்டில் குழந்தைகளுடன் செம ஜாலியாக என்ஜாய் செய்வதோடு அந்த வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீரா நீங்களா இது??
குறிப்பாக மகள் நைராவின் சேட்டைகளை அடிக்கடி பதிவிட்டு லைக்குகளை பெற்று வரும் சமீரா ரெட்டி இப்பொழுது தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் கொஞ்சம் கூட அடையாளமே தெரியாத அளவிற்கு பாய் கட் ஹேர் ஸ்டைலில் ச்சப்ப்பி கேர்ள்ளாக உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.. சமீரா நீங்களா இது?? என பலரையும் கேட்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











