முதல்ல போன் நம்பர்தான் கேட்டேன், அப்புறம்தான்... காதலில் விழுந்த கதையை சொன்ன ஹீரோயின்

By

Recommended Video

கம்ஃபோர்ட் ஷோனை விட்டு வெளியே வந்து வழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.. சமீரா ரெட்டியின் அட்வைஸ் - வீடியோ

மும்பை: தான் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்ட கதையை, பிரபல முன்னாள் ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மும்பையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

திருமண நாள்

திருமண நாள்

இவர்களுக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருக்கும் சமீரா, அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அவருக்கு ஆறாவது திருமண நாள்.

6 வருடம் ஓடிவிட்டது

திருமண நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணம் நேற்று நடந்தது போல்தான் இருக்கிறது. அதற்குள் ஆறுவருடம் ஓடிவிட்டது என்று தெரிவித்திருந்தார். அதோடு, திருமணத்தின் போது பயங்கரச் சிரிப்புடன் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதை ஏராளமானோர் லைக் செய்திருந்தனர்.

எப்படி காதலில்

எப்படி காதலில்

அதில் ஒரு ரசிகர், எப்படி இருவரும் காதலில் விழுந்தீர்கள் என்ற கதையை சொல்ல முடியுமா? என்று கேட்டிருந்தார். இதையடுத்து சத்தம் போடாமல் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்ட சமீரா, அதில் காதலில் விழுந்த கதையை, கொஞ்சம் வெட்கத்துடனேயே தெரிவித்துள்ளார்.

போன் நம்பர் கேட்டேன்

போன் நம்பர் கேட்டேன்

அது 2010 ஆம் ஆண்டு. அக்‌ஷயின் வர்தேஞ்சி பைக்கில் வைத்து ஷூட்டிங். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். ஷூட்டிங் முடிந்தபின் அவரிடம் போன் நம்பர் கேட்டேன். அவ்வளவுதான். இப்போது இங்கே இருக்கிறோம் என்று தனது காதல் திருமணம் வரை கதையை ஒரே வரியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இதற்கு ரசிகர்கள், இது அழகான காதல் என்று கமென்ட் அடித்து வருகின்றனர். ஆறாவது திருமண நாளை முன்னிட்டு நடிகை சமீராவுக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X