கணவர் சம்மதிச்சிட்டார்... திருமணமானாலும் நடிப்பைத் தொடர்வேன்! - சமீரா

By Shankar

திருமணம் ஆனால் என்ன... தொடர்ந்து நடிக்க என் கணவர் ஒப்புக் கொண்டததால் நடிப்பை தொடரப் போகிறேன், என்று அறிவித்துள்ளார் சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், வெடி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சமீரா ரெட்டி, சமீபத்தில் தன் நீண்ட நாள் காதலர் தொழிலதிபர் அக்ஷய்வர்தேயை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும்

மீண்டும்

கடந்த மூன்று மாதங்களாக திருமண வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்த சமீரா, மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். தனக்கு மீண்டும் வாய்ப்பு வேண்டும் என வெளிப்படையாகக் கேட்டுள்ளார்.

மாற்றம்

மாற்றம்

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "திருமண வாழ்க்கை என் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஒரு கன்னட படத்தின் படப்பிடிப்பு ஒன்றில்தான் நானும் அவரும் சந்தித்து காதல் வசப்பட்டோம். கணவர் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளார். என் சமையலை ருசித்து சாப்பிடுகிறார்.

திருமணமானால் என்ன...

திருமணமானால் என்ன...

திருமணமானதும் நடிகைகளின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடும் என்று கருதினேன். எனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது போல் நிகழவில்லை. மீண்டும் நடிக்கப் போகிறேன். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்.

தொழில் அதிபர்

தொழில் அதிபர்

கரீனா கபூர், ஜூகி சாவ்லா, மாதுரி தீட்சித் போன்றோர் திருமணத்துக்கு பிறகும் சாதிக்கின்றனர். எதிர்காலத்தில் ஒரு தொழில் அதிபராகும் எண்ணமும் உள்ளது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X