ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! - சமீரா ரெட்டி

By Shankar

நான் ஒரு ரஜினி ரசிகை. அதனால் அவருடன் ஒருபடத்திலாவது நடிக்க ஆவலாக உள்ளேன். விஜய்யுடனும் நடிக்க ஆசை, என்றார் நடிகை சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள 'நடுநிசி நாய்கள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது.

தனது தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டி:

வாரணம் ஆயிரம் மறக்க முடியாத படம். கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் எனக்கு இடம் தந்த படம் அது. கவுதம் மேனன் திறமையான இயக்குனர். அவரது நடுநிசி நாய்கள் படத்திலும் நான் நடித்துள்ளேன். இது திரில்லர் கதை.

தூக்கத்தில் நடப்பேன்...

சைக்கோ கொலையாளியிடம் மாட்டி அவனிடம் இருந்து தப்பிக்க போராட்டம் நடத்தும் ஒரு கல்லூரி மாணவியின் கதை இது. படம் பிரமாதமாக வந்துள்ளது. நிஜவாழ்வில் திகில் சம்பவங்களை நான் சந்தித்தது இல்லை.

எனக்கு ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. அது, தூக்கத்தில் நடப்பது. ஆனால் யாருக்கும் என்னால் தொந்தரவு ஏற்பட்டதில்லை.

ரஜினியின் ரசிகை நான். அவருடன் ஜோடியாக ஒருபடத்திலாவது நடிக்க ஆசை. விஜய்யும் எனக்குப் பிடித்த நடிகர்தான். அவருடனும் நடிக்க ஆசை.

காதல் அனுபவம்...

காதலிக்காத அல்லது காதலில் விழாத இளம் பெண்கள் யார்தான் இருக்க முடியும். அந்த வகையில், எனக்கும் காதல் அனுபவம் உண்டு. கல்லூரி வாழ்க்கையில் காதலித்துள்ளேன். ஆனால் பயம், வெட்கம் காரணமாக காதலை சொல்லவில்லை. அது நிறைவேறாமலே போய்விட்டது.

இனி புதிதாக காதலிக்க வேண்டும். எனக்கென்று ஒருவர் நிச்சயம் இருப்பார்.

இப்போது எனக்கு யாருடனும் காதல் இல்லை. அதனால் காதலர் தினத்தில் படப்பிடிப்பில் இருப்பேன்.

என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம், என் கண்கள். அதேபோல உலகத்திலேயே எனக்குப் பிடித்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள்தான். ரசனையில் நம்பர் ஒன். அதனால்தான் எனக்கு தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X