வீட்டுக்குள் ரகசியமாக நடந்த சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம்!

By Shankar

மும்பை: நடிகை சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம் நேற்று மாலை, மும்பையில் நடந்தது.

சமீரா ரெட்டியின் பங்களாவுக்குள் ரகசியமாக நடந்த இந்தத் திருமணம் குறித்து யாருக்கும் தகவல் சொல்லப்படவில்லை. விஷயம் தெரிந்து ஓடி வந்த செய்தியாளர்களும் - புகைப்படக்காரர்களும் சமீரா வீட்டு வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

சமீரா

சமீரா

தமிழில் ‘வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படத்தில் அவர் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்தார். சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் விஷாலுடன் வெடி மற்றும் மாதவனுடன் வேட்டை ஆகிய படங்களிலும் நடித்தார். இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் சமீரா ரெட்டி நடித்து உள்ளார்.

காதல்

காதல்

சமீரா ரெட்டிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக காதலித்து வந்தனர்.

ரகசிய நிச்சயதார்த்தம்

ரகசிய நிச்சயதார்த்தம்

கடந்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி இருவரும் மோதிரம் மாற்றி ரகசியமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மேலும், அவர்களது திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியது.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

இந்த நிலையில், நடிகை சமீரா ரெட்டி-தொழில் அதிபர் அக்ஷய் வர்தே திருமணம் மும்பை பாந்திராவில் உள்ள சமீரா ரெட்டி பங்களாவில் திடீரென நேற்று மாலை நடந்தது.

மல்லையா

மல்லையா

விழாவில் பங்கேற்க இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் தவிர கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா கலந்து கொண்டார்.

குவிந்த பத்திரிகையாளர்கள்

குவிந்த பத்திரிகையாளர்கள்

சமீரா ரெட்டி திருமண தகவல் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. திருமண தகவல் மாலையில்தான் பலருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரது பங்களா முன்பு ஏராளமான பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் குவிந்தனர். அவர்கள் யாரும் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பங்களா வாசலில் காத்திருந்தனர்.

போட்டோவுக்கு போஸ்

போட்டோவுக்கு போஸ்

திருமணம் முடிந்து இரவு 8 மணிக்கு மேல் சமீரா ரெட்டி தனது காதல் கணவர் அக்ஷய் வர்தேயுடன் வெளியே வந்தார். பத்திரிகை போட்டோ கிராபர்களுக்கு சிறிது நேரம் போஸ் கொடுத்தார். போட்டோ கிராபர்கள் சரமாரியாக கிளிக்கித் தள்ளினர். பின்னர் டாடா காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X