»   »  டிவிக்கு தாவிய சமிக்ஷா!

டிவிக்கு தாவிய சமிக்ஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி களேபரம் செய்து பார்த்தும் ஒன்றும் தேறாததால், சமிக்ஷா இப்போது டிவிதொடரில் நடிக்கப் போய்விட்டார்.

அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானவர் சமிக்ஷா. தல் படத்திலேயேகவர்ச்சி அலையைப் பரப்பிய அவருக்கு அடுத்தடுத்து அப்படியாப்பட்ட ரோல்களேதேடி வந்தன.

மெர்க்குரிப் பூக்கள், மனதோடு மழைக்காலம் என சில படங்களில் மட்டுமேநடித்துள்ள சமிக்ஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. கிளாமருக்குவரைமுறையே இல்லை என்று கோடிட்டுக் காட்டியும், ரோடு போட்டும் கூட தன்னைத்தேடி பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் நொந்து போனார் சமிக்ஷா.

சரி, பொறுத்தது போதும் பொங்கிடுவோம் என முடிவு செய்த சமிக்ஷா இப்போதுடபால் என்று டிவிக்குத் தாவி விட்டார். தமிழ் டிவிக்கு அல்ல, இந்தி டிவிக்குப் போய்விட்டார்.

மும்பையைச் சேர்ந்த சமிக்ஷாவுக்கு இந்தி தான் தாய்மொழி. இதனால் சிக்கல் ஏதும்இல்லை. ஜரா என்ற இந்தித் தொடரில் நடிக்க புக் ஆகியுள்ளாராம் சமிக்ஷா.

என்னங்க டபக்குனு டிவிக்குப் போயீட்டீங்க என்று கேட்டால்,

சினிமாவில் நடிக்க வரும் முன்பு நான் நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளேன். அந்தஅனுபவம்தான் எனக்கு இப்போது இந்தித் தொடருக்கான வாய்ப்பைப் பெற்றுத்தந்துள்ளது.

சஹாரா சானலில் இந்த ஜரா தொடர் ஒளிபரப்பாகிறது. நான்தான் இதன் ஹீரோயின்.எனது பெயர்தான் ஜாரா. சினிமாவுக்கும், விளம்பரங்களுக்கும் கொடுத்த அதேமுக்கியத்துவத்தைதான் இப்போது டிவி தொடருக்கும் தருகிறேன் என்றார்.

அப்ப இனிமே சினிமா கிடையாதா என கவலையோடு கேட்டோம். அப்படியெல்லாம்இல்லை இப்போது முருகா படத்தில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் ரீமேக் ஆகும்மன்மதன் படத்திலும் நான் இருக்கிறேன் (செம கிளாமராம் அதில்!). டிவிக்குப் போய்விட்டாலும் தொடர்ந்து சினிமாவிலும் ஒரு புடிப்போடுதான் இருப்பேன் என்கிறார்.

சமிக்ஷாவுக்கு அதிக சினிமா வாய்ப்புகள் வராததற்கு அவரது பிஹேவியர்தான்காரணம் என்கிறார் ஒரு கோலிவுட் வாட்ச் டவர் பார்ட்டி.

தினமும் கிளப்புக்குப் போய் பார்ட்டியில் கலந்து கொள்ளாவிட்டால் சமிக்ஷாவுக்குதலை வெடித்து விடும். இதனால் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்தில் அவர்வருவதில்லை. வந்தாலும் சீக்கிரமே போய் விட வேண்டும் என்றுஅவசரப்படுத்துவார்.

அதுதவிர அவருக்கு நிறைய பாய் பிரண்டுகள். அவர்களோடு போனில் பேசுவதும்,அரட்டை அடிப்பதிலும்தான் அதிகம் அக்கறை காட்டுவார். அதனால்தான்சமிக்ஷாவுக்கு சீக்கிரமே மார்க்கெட் போண்டியாகி விட்டது.

கிளாமர் தாராளமாக காட்டுவார் என்ற ஒரே ஒரு பிளஸ் பாயிண்டு மட்டும்தான்இதுவரை அவர் கோலிவுட்டில் தாக்குப் பிடிக்க உதவியது என்கிறார் அவர்.

Read more about: samiksha lands in tv serial

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil