»   »  வருத்த சமிக்ஷா!

வருத்த சமிக்ஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமிக்ஷா வருத்தத்தில் உள்ளார். எல்லாம் நல்ல வாய்ப்புகள் வராத கவலைதான்.

அறிந்தும் அறியாமலும் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமிக்ஷா. இந்த மும்பை மயில், இப்போது தமிழில்படங்கள் இல்லாமல் ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறது.

திமிசு பாப்பாவான சமிக்ஷாவுக்கே பட வாய்ப்பு இல்லையா என்று கேட்கலாம். பட வாய்ப்புகள் என்னவோபாப்பா வீட்டு கதவை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அம்மணிக்குத்தான் அவற்றை ஒத்துக்கொள்ள மனம் இல்லையாம்.

ஏனாம்? வருகிற எல்லா வாய்ப்புகளமே கிளாமரான கேரக்டர் என்பதால்தான் ஒத்துக் கொள்ள மனமேஇல்லாமல் வருத்தமாக இருக்கிறாராம் சமிக்ஷா.

நான் நல்ல அழகுதான், கிளாமருக்கேற்ற உடல் வாகும் அம்சமாகவே இருக்கிறது. கிளாமராக நடிக்க எனக்கு எந்ததயக்கம் இல்லைதான். இருந்தாலும் ஒரே மாதிரியாக நடித்தால் அலுத்துப் போய் விடாதா? (இல்லைஎன்கிறார்களே ரசிகர்கள்!)

நான் அறிந்தும் அறியாமலும் முதல் படம் என்பதால் கிளாமராக நடிக்க சம்மதித்தேன். அது ஒரு பிரேக்காகஅமையும் என்பதால். தொடர்ந்து சில படங்களில் கிளாமராக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காகஅப்படியே நடிப்பேன் என்று எதிர்பார்த்தால் எப்படி என்று விசனப்படுகிறார் இந்த அழகு மயில்.

இவர் இப்படி என்றால், சமிக்ஷாவை புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வேறு மாதிரிபேசுகிறார்கள். சமிக்ஷாவின் உடல் வாகுக்கு அவருக்கு கிளாமர்தான் சூட் ஆகும். அதனால் கிளாமர் ரோல்என்றால் கூப்பிடு சமிக்ஷாவை என்ற நிலை உள்ளது என்பது அவர்களது கருத்து.

ஆனால் சமிக்ஷாவுக்கு வித்தியாசமான, படு வித்தியாசமான அதாவது உயிர் படத்தில் சங்கீதா செய்தது போல,திமிரு படத்தில் ஷ்ரேயா ரெட்டி போட்டுத் தாக்கியது போன்ற ரோல்கள்தான் ரொம்ப இஷ்டமாக இருக்கிறதாம்.அதுபோன்ற கேரக்டருடன் வாய்ப்பு வந்தால் பின்னி எடுத்து விடுவேன் என்கிறார் சமிக்ஷா.

எனது நினைப்பு இப்படி இருக்கிறது. ஆனால் வருகிறதெல்லாம் 2வது ஹீரோயின், கிளாமர் பாட்டு என்றரீதியில்தான் இருக்கிறது, என்னத்தச் சொல்ல என்று புலம்புகிறார் சமிக்ஷா.

இப்படி கிளாமராக நடிக்க வருத்தப்படும் சமிக்ஷா வெளி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது கிளாமர்டிரஸ்ஸில்தான் போய்க் கலக்குகிறார். சாயந்திரம் ஆச்சுன்னா பார்ட்டிக்குப் போகாமல் இருக்கவே முடியாதாம்!

என்னத்தச் சொல்ல போங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil