»   »  சமிக்ஷாவும், உதடுகளும் சமிக்ஷா!

சமிக்ஷாவும், உதடுகளும் சமிக்ஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமிக்ஷா! பெரிதும் பேசப்பட்டு, அதிகம் கவனிக்கப்படாமல் போன ஒரு அழகிய நடிகை.

அறிந்தும் அறியாமலும் படம் பார்த்தவர்கள் சமிக்ஷாவை அறிந்திருப்பார்கள்.

முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவருபவர்கள் ஒரு ரகம், இரண்டு, மூனு படங்களுக்குப் பிறகுகவனிக்கப்படுபவர்கள் இன்னொரு ரகம். இதில் சமிக்ஷா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் எனலாம்.

முதல் படம் நன்றாக ஓடியும் கூட சமிக்ஷாவுக்குப் பிரேக் கிடைக்கவில்லை. மாறாக அதில் நடித்த ஆர்யா தான்இப்போது முன்னணி நாயகராகிவிட்டார்.


சமிக்ஷா விளம்பரப் படங்களில் நடித்து வந்த மாடல்.

மாடலிங்கில் நுழைந்தால் சினிமாவுக்குள் ஈசியாக என்ட்ரி ஆகி விடலாம் என்ற இந்தக் காலத்தில், சமிக்ஷாவும்அதற்கு விதி விலக்கல்ல. விளம்பரப் படங்களில் நடித்துப் பிரபலமாக இருந்த சமிக்ஷா அறிந்தும் அறியாமலும்மூலம் சினிமா நடிகையாகிவிட்டார்.

ஆனால் முதல் படத்திற்குப் பிறகு அவரைக் காணோம். என்னாச்சு மேடம் என்று சமிக்ஷாவிடம் கேள்விகளைப்போட்டோம். சமிக்ஷாவுடன் இதோ ஒரு என்கவுண்டர்!

தமிழ் ரசிகர்களுக்கு நான் பல விளம்பரப் படங்கள் மூலம் முன்பே அறிமுகமாகி விட்டேன்.

டிவி விளம்பரம் மூலம் வீடுகளில் புகுந்த நான், இப்போது திரைப்படங்கள் மூலம் அவர்களது இதயத்திற்குள்ளும்ஊடுறுவியுள்ளேன்.

நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் டெல்லியில். மாடலிங் செய்ய ஆரம்பித்த நான் விரும்பித்தான் சினிமாவுக்குள்வந்தேன்.

சினிமாவில் நடிப்பதற்காக நான் நிறைய ஹோம் ஒர்க் செய்துள்ளேன். நடிப்புக்காக பயிற்சியும் எடுத்துள்ளேன்.

அதனால் எந்த ரோல் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவேஉண்டு.

இப்போது கிளாமர் காலம். எனவே படங்களில் கிளாமர் காட்டாமல் நடிக்க முடியாது என்ற நிலை. எனவேநானும் திகட்டாத அளவுக்கு கிளாமர் காட்டத் தயார் தான். வல்கர் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டுவதில் தப்பேஇல்லை.


நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். இங்கு தான் விதம் விதமான கேரக்டர்களில் நடிக்கவாய்ப்புகள் அதிகம்.

ரசிகர்களும் நமது திறமையான நடிப்புக்கு நல்ல ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே தான் மற்ற படங்களை விடதமிழில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

நான் இயற்கையாகவே நல்ல அழகுதான். இதை நானாக சொல்லவில்லை, எனது குடும்பத்தினர், தோழிகள்சொல்லித்தான் எனது அழகும், பிளஸ் பாயிண்டுகளும் எனக்குத் தெரிய வந்தது.

எனது உதடுகள் பார்க்கவே படு க்யூட்டாக இருப்பதாக நிறையப் பேர் சொல்லியுள்ளார்கள் (அட்டென்ஷன் கமல்,சிம்பு, எஸ்.ஜே. சூர்யா!)

அதே போல, எனது கண்களும் ரொம்ப பவர் புல். எனது கண்களைப் பார்த்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்றுதெரியாமல் தடுமாறி நின்று விடுவார்கள்.

அந்த அளவுக்கு ரொம்பவே வசீகரமானது எனது கண்கள். எனக்கும் கண்களைத்தான் ராம்பப் பிடிக்கும் (எங்களுக்கும் தான்மேடேம்!)

அறிந்தும் அறியாமலும் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். அதை மிகவும் லயித்து செய்தேன். அடுத்தடுத்து விரைவில் நிறையப்படங்களில் நடித்து ரசிகர்களை என் பக்கம் ஈர்ப்பேன்.

சமிக்ஷாவுக்கு ரொம்பவே தன்னம்பிக்கை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil