»   »  சோக சம்விருத்தா!

சோக சம்விருத்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிர் படத்தின் ஒரிஜினல் நாயகியான சம்விருத்தா படு சோகமாக காட்சி தருகிறார்.

ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்விருத்தாவின் நடிப்பில் வெளியான உயிர், படு ஓட்டம் ஓடி வசூலை அள்ளிக் கட்டிக்கொண்ட படம். இப்படத்தில் ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சம்விருத்தா என்றாலும் கூட, பெயரை அள்ளிக்கொண்டவர் சங்கீதா தான்.

வில்லி கதாபாத்திரமாக இருந்தபோதிலும் கூட அந்தப் பாத்திரத்திற்கு சங்கீதா உயிர் கொடுத்து ரசிகர்களைஉசுப்பேத்தி விட்டார்.

சங்கீதா கேரக்டர் பெரும் சர்ச்சையில் சிக்கியபோதும் கூட, அதையே விளம்பரமாக்கி படத்தை ஓட்டு ஓட்டென்றுஓட்டித் தள்ளி விட்டார்கள்.

இதனால் ஹீரோயினாக நடித்த சம்விருத்தா கவனிக்கப்படாமல் போய் விட்டார். உயிர் படம் தனக்கு தமிழ்சினிமாவில் உயிர் கொடுக்கும் என நினைத்திருந்த சம்விருத்தா இதனால் அப்செட் ஆகி விட்டார். உயிர் படத்தால்சங்கீதாவுக்குத் தான் புதிய வாய்ப்புகள் தேடி ஓடி வந்தன.

இதனால் கடுப்பாகிப் போன சம்விருத்தா தமிழே வேண்டாம் என்று இப்போது மலையாளத்திற்கே தாவிவிட்டார். அங்கும் கூட அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லையாம். அனாமிகா என்ற ஒரே ஒருபடம்தான் சம்விருத்தாவின் கையில் உள்ளதாம்.

இப்படத்தில் அவர்தான் ஹீரோயின். இனிமேல் மலையாளத்தில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம்சம்விருத்தா. தப்பித் தவறிக் கூட தமிழுக்கு இனிமேல் போகக் கூடாது என்பதில் படு தீவிரமாக இருக்கிறாராம்.

அதேபோல தெலுங்கில் அவர் டாக்டர் ராஜசேகருடன் நடித்த படம் கூட பெரிதாக கை கொடுக்கவில்லையாம்.இதில் சம்விருத்தா கிளாமர் காட்டியும் கலக்கியிருந்தார்.இப்படி தேடிப் போன மொழிகள் எல்லாம் கைவிட்டு விடவே சோகமாகியுள்ளாராம் சம்விருத்தா. முதலில்சொந்த மொழியில் சாதிப்போம், அப்புறமாக அக்கம் பக்கத்திற்கு போகலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்சம்விருத்தா.சமர்த்தான முடிவுதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil