சம்யுக்தாவின் திருமண பார்ட்டி... யாரு யாரு வந்தாங்கனு தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா சண்முகநாதன் முன்னாள் கிரிக்கேட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த வாரம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த நிலையில் தற்போது சம்யுக்தா தனது நண்பர்களுக்கு திருமண பார்ட்டி வைத்துள்ளார்.
பொறியியல் பட்டதாரியான சம்யுக்தா, மாடல் துறையில் ஈடுபாடு பட்டு வந்த அவர், மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஊலு' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தனது சினிமா கனவை விரிவாக்க நினைத்த சம்யுக்தா, பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின், வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்து வந்தார். நடிகை சம்யுக்தாவிற்கு ஏற்கனவே கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு மகன் இருக்கும் நிலையில் இருவரும் விவகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தனது மகனை தனியாக கஷ்டப்பட்டு வளர்ந்து வந்த சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமண பார்ட்டி: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த், கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்தின் மகன். இவர் ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்காக சில போட்டிகளில் விளையாடி உள்ளார்.அனிருதாவிற்கு ஏற்கனவே பிரபல மாடலான ஆர்த்தி வெங்கடேசனுடன் திருமணம் நடந்த நிலையில், இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் அவரை விவாகரத்து செய்தார். ஆக, சம்யுக்தா மற்றும் அனிருத்தா ஶ்ரீகாந்த் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் தான். இவர்களில் திருமணம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் தற்போது, சம்யுக்தா தனது நண்பர்களுக்கு திருமண பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில், நடிகை சம்யுக்தா, சக தோழிகளான வாணி போஜன், ஐஸ்வர்யா தத்தா, மீனாட்சி கோவிந்தராஜனுடன் ஜாலியாக பார்ட்டி கொண்டாடியிருக்கிறார். அவர்களுடன் எடுத்த ரீல்ஸ் வீடியோவை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு பல பிரபலங்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications