4 நாட்கள் சரக்கு பார்ட்டி.. ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம்.. மிரள வைக்கும் கோமாளி பட நடிகை!
சென்னை: நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் பார்ட்டி பண்ண வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
Recommended Video
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் முன்னாள் காதலியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை படத்திலும் இவர் ஹீரோயின்களில் ஒருவராக போல்டான காட்சிகளில் நடித்து அசத்தி இருந்தார்.

பெங்களூரு பொண்ணு
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார்.

கோமாளி நடிகை
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தில் முன்னாள் காதலியாக நடித்திருப்பார் சம்யுக்தா ஹெக்டே. ஷாராவின் மனைவியாக வரும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஜெயம் ரவியுடன் ஸ்கூல் போர்ஷன்களிலும் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

வருணுடன் பப்பி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஹீரோவாக அறிமுகமான வருணின் பப்பி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் சம்யுக்தா ஹெக்டே. செம போல்டான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வரும் இவர் சமீபத்தில் மன்மத லீலை படத்திலும் நடித்திருந்தார்.

மன்மத லீலை
பிரபுதேவாவின் தேள் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா ஹெக்டே, வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மன்மத லீலை படத்தில் நடித்திருந்தார். வயசான கணவர் ஜெய பிரகாஷ் இடமிருந்து தனது கள்ளக் காதலனை ஒளித்து வைக்க அவர் படும் போராட்டக் காட்சிகள் படத்தில் வேறலெவல் ஹைலைட்டாக இருந்தது. கன்னடத்திலும் வரிசையாக 3 படங்களில் நடித்து வருகிறார்.

பிகினியில் மிரட்டல்
சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மினி பிகினி அணிந்து சம்மரை மேலும், சூடாக்கி இருந்தார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஏற்கனவே பிகினி உடையில் பப்ளிக் பார்க்கில் உடற்பயிற்சி செய்தார் என இவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் குடுமிப்பிடி சண்டையே நடந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சரக்கு பார்டி
இந்நிலையில், தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கடந்த 4 நாட்களாக சரக்கும், டான்ஸுமாக ஒரே கும்மாளம் போட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த போட்டோக்களை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியையும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அறிய வெளிப்படுத்தி உள்ளார்.

ஆண் நண்பர்களுடன் ஆட்டம்
பப், பார்ட்டி என நண்பர் ஒருவர் செம வெயிட்டான பார்ட்டி வைத்துள்ளார் போல தெரிகிறது. ஏகப்பட்ட ஆண் நண்பர்களுடன் படு நெருக்கமாக போஸ் கொடுத்து சம்யுக்தா எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோக்களும், க்ரூப் செல்ஃபிக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











