விஜய் சேதுபதியின் புதிய படம்.. அட இந்த ஹீரோயினும் இருக்காங்களா?.. செம காம்பினேஷன்
சென்னை: ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதற்கு முன்னதாக அவர் நடித்த மகாராஜா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஆனால் இந்தப் படமோ வந்ததும் தெரியவில்லை. படத்தை பார்த்தவர்களும் ஆஹா ஓஹோவென்றெல்லாம் படத்தை கொண்டாடவில்லை. அடுத்ததாக அவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கிவருகிறார். இங்கு ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லனாகவும் நடித்துவந்த அவர்; ஹிந்தியிலும் அதே ஃபார்முலாவை பின் தொடர்ந்தார். அதன் பலனாக ஃபர்ஸி வெப் சீரிஸும், ஜவான் திரைப்படமும் நல்ல ரிசல்ட்டை அவருக்கு கொடுத்தன. அதேசமயம் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் பாசிட்டிவ்வான லீடு ரோலில் நடித்த அப்ளாஸை அள்ளினார்.
ரசிகர்களின் கோரிக்கை: அவர் என்னதான் வில்லனாக நடித்து மிரட்டினாலும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கோரிக்கைக்கு ஒருவழியாக செவி மடுத்த சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம்தான் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் எதிர்பார்ப்புடன் வெளியான படம் மெகா ப்ளாக் பஸ்டர்.
கலக்கிய திரைக்கதை: படத்தில் பெரிதாக கவனிக்கப்பட்டது என்றால் நித்திலனின் ஸ்க்ரீன் பிளே. நான் லீனியர் ஸ்டைலில் எழுதப்பட்டிருந்த திரைக்கதையை எந்த வித சொதப்பலும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் அனைவரது வாயையும் பிளக்க வைத்துவிட்டார். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டை எல்லாம் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். கண்டிப்பாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் அவர் இடம்பிடிப்பார் என்பதை மகாராஜா உணர்த்திவிட்டது.

சீனாவிலும் மகாராஜா கலக்கல்: தமிழ்நாட்டில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆன மகாராஜா சீனாவிலும் சக்கைப்போடு போட்டது. அந்த நாட்டில் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். இதனால் அந்த நாட்டிலும் விஜய் சேதுபதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க ஆறுமுக குமார் இயக்கத்தில் தனது 51ஆவது படமான ஏஸ் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
சுமாரான வரவேற்பு: இதில் அவருடன் பப்லு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மகாராஜா மெகா ஹிட்டானதன் காரணமாக இந்த படமும் அந்த ஃபார்மை தக்க வைக்கும் என்று சேதுவின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி பெரிய இம்பேக்ட் எதையும் க்ரியேட் செய்யவில்லை. அதேசமயம் ஓடிடியில் ரிலீஸாகி படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.
அடுத்த படம்: இதற்கிடையே தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சேது. அவர் அவுட்டேட்டட் இயக்குநராகிவிட்டார் இப்போது ஏன் அவர் இயக்கத்தில் சேது நடிக்க வேண்டும் என்று பலரும் பேசினார்கள். ஆனால் தான் அதையெல்லாம் பார்ப்பதில்லை. கதை பிடித்திருந்தால் நடிப்பேன் என்று பதிலடி கொடுத்திருந்தார். இப்படத்தில் அவருடன் நடிகை சார்மி நடிக்கிறார். இந்நிலையில் அதில் இன்னொரு ஹீரோயினும் கமிட்டாகியிருக்கிறார். அதன்படி வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா மேனனும் அந்தப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











