ஓபன் வைட் ஜாக்கெட்.. கிம் கர்தாஷியனுக்கே டஃப் கொடுப்போம்ல.. வாத்தி பட ஹீரோயினின் சம்பவம்!
சென்னை: மலையாள படங்களில் நடித்து வந்த சம்யுக்தா மேனன், கடந்த ஆண்டு தனுஷின் வாத்தி மற்றும் தெலுங்கில் வெளியான விருபாக்ஷா உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானார். மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் விருபாக்ஷா 2 மற்றும் ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டுள்ளார்.
2016ல் மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சம்யுக்தா மேனன், கடந்த 2018ல் வெளியான தீவண்டி படத்தில் சிறப்பாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் களறி மற்றும் ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தனுஷின் வாத்தி படத்தில் நடித்த பின்னர் தான் கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

"அடியாத்தி இது என்ன ஃபீலு, உன்னால நான் ஃபெயிலு" என கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் சம்யுக்தா மேனனை பார்த்து உருகி பாடி வருகின்றனர்.
போல்டான நடிப்பு: 2021ம் ஆண்டு வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான எரிடா படத்தில் நாசருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வயதான தொழிலதிபருக்கு மனைவியாக செல்லும் சம்யுக்தா மேனன் அவரிடம் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் அந்த படத்தின் கதை. ஆடுகளம் கிஷோர் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சம்யுக்தா மேனன் லுக், ஹேர் ஸ்டைல் என அந்த படத்தில் வேறுமாதிரி இருப்பார்.
வாத்தியாரம்மா: தனுஷின் வாத்தி படத்தில் ஆசிரியையாக நடித்த சம்யுக்தா மேனனை தமிழ் சினிமா ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாடினர். அந்த படத்தில் தனுஷுக்கு பிறகு ரசிகர்களை பார்க்க வைத்த ஒரே நபர் என்றால் அது சம்யுக்தா மேனன் தான். வாத்தி படத்தில் சாந்தமாக நடித்த சம்யுக்தா மேனன் விருபாக்ஷா படத்தில் ஹாரர் லுக்கில் நடித்து மிரட்டினார்.
கிம் கர்தாஷியனுக்கே போட்டி: நடிகைகள் பாரம்பரிய உடையை அணிவது போல அணிந்தாலும், அதில், எப்படி எல்லாம் கிளாமர் காட்டி ரசிகர்களை கவர முடியும் என்பதில் ரொம்பவே குறியாக உள்ளனர். சமீபத்தில், அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிம் கர்தாஷியன் அணிந்து வந்த உடை பலரையும் கண்களை மூட வைத்து விட்டது. இந்நிலையில், அதே அளவுக்கு தாராளமான உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் சம்யுக்தா மேனன்.
விரைவில் திருமணம்?: 28 வயதாகும் சம்யுக்தா மேனன் விரைவில் தனது காதலரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்வாரா? அல்லது சினிமாவில் பிசியான நடிகையாகவே வலம் வருவாரா? என்பது தெரியவில்லை. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போடாமல் எப்போதாவது ஒருமுறை போட்டாலும் வெயிட்டான புகைப்படங்களை இறக்குறீங்களே என ரசிகர்கள் சம்யுக்தா மேனனுக்கு ஃபயர் விட்டு வருகின்றனர். இந்தியில் மகராணி, மலையாளத்தில் மோகன்லாலின் ராம் மற்றும் தெலுங்கில் சுயம்பு உள்ளிட்ட பல படங்கள் சம்யுக்தா மேனன் கைவசம் உள்ளன. இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 2.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நிலையில், விரைவில் 3 மில்லியனை நெருங்கும் முயற்சியாக அதீத கவர்ச்சியை காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications