Samyuktha : அந்த முத்தக்காட்சியால் மனமுடைந்தேன்… வாத்தி பட நாயகி பேட்டி!

சென்னை : வாத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சம்யுக்தா மேனன் தனது சினிமா அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகை சம்யுக்தா மேனன் மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.

Samyuktha Menon interview about her film experienced

தீ வண்டி : நடிகை சம்யுக்தா மேனன் 2018ம் ஆண்டு வெளியான தீ வண்டி என்ற படத்தில் டோவினோ தாமஸூக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார். இவர் நடித்த பீமலா நாயக், பிம்பிசாரி படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

நச்சுனு ஒட்டிக்கொண்டார் : தமிழில் களரி படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் ஜூலை காற்றில் நடத்தில் நடித்திருந்தாலும், தனுஷூடன் வாத்தி படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானதை அடுத்து இரண்டு ஆடியன்ஸ் மனதிலும் நச்சுனு ஒட்டிக்கொண்டார்.

Samyuktha Menon interview about her film experienced

விரூபாக்‌ஷா : வாத்திப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சம்யுக்தா மேனன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் வெளியான விரூபாக்‌ஷா படத்தில், சாய்தரம் தேஜூக்கு ஜோடியாக நடித்துள்ளார்.கடந்த மாதம் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

தமிழ் தெரியும் : இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சம்யுக்தா மேனன், நான் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தேன், சின்மயா வித்யாலயா பள்ளியில் தான் படித்தேன் அங்கு தமிழ் மாணவர்கள் அதிகம் இருந்ததால், தமிழ் எனக்கு நன்றாகத் தெரியும். இதனால், தமிழ் படங்களில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தனுஷின் வாத்தி படம் தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறது.

Samyuktha Menon interview about her film experienced

மனமுடைந்தேன் : தொடர்ந்து பேசிய சம்யுக்தா, கவர்ச்சி எனக்கு செட் ஆகவில்லை இதனால், குடும்ப பாங்கான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என் முதல் படத்திலே லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்தேன். அந்த காட்சி கதைக்கு தேவை என்பதால்தான் நடித்தேன். அந்த முத்தக்காட்சியில் நான் நடித்த போது எத்தனை ரீ டேக் எடுக்கப்பட்டது என்று சிலர் என்னை கேள்வி கேட்டார்கள். இதனால், நான் மனமுடைந்தேன். கதைக்கு முத்தக்காட்சி தேவை என்றால் நடிக்கலாம் என்று சம்யுக்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X