Samyuktha: பால் பப்பாளியாம்.. வெள்ள தக்காளியாம்.. சம்யுக்தாவின் குளுகுளு டான்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைருக்கும் பரிச்சீயம் ஆனவர் தான் நடிகை சம்யுக்தா சண்முகநாதன். இவர் முன்னாள் கிரிக்கேட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மாடல் அழகியான சம்யுக்தா, மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஊலு' என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பின் பெரியதாக எந்த வாய்ப்பும் வராததால், தமிழ் சினிமா பக்கம் வந்த சம்யுக்தாவிற்கு பிக் பாஸ் சீசன் 4ல் நிகழ்ச்சியல் கலந்து கொள்ளும்வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் வீட்டிற்குள் அனைவருக்கும் பிடித்த ஒருவராக இருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின், சம்யுக்தாவிற்கு வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரண்டாம் திருமணம்: நடிகை சம்யுக்தாவிற்கு ஏற்கனவே கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பிறந்த நிலையில், வெளிநாடு சென்ற கணவர் மீண்டும் இந்தியா வரவே இல்லை. அதன்பிறகு கார்த்திக் அங்கு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவது தெரியவந்ததை அடுத்து அவரை விட்டு பிரிந்து, யார் துணையும் இல்லாமல் தனியாக மகனுடன் வாழ்ந்து வந்தார். இதையடுத்து, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துடன் நல்ல நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியதை அடுத்து இருவரும் கடந்த ஆண்டு மாதம் செய்து கொண்டனர்.
சம்யுக்தாவின் டான்ஸ்: அனிருதா, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகன் ஆவர். இவர் ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்காக சில போட்டிகளில் விளையாடி உள்ளார். அனிருதாவிற்கு ஏற்கனவே பிரபல மாடலான ஆர்த்தி வெங்கடேசனுடன் திருமணமாகி இருவரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு தான் சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக சமைத்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராமில் பால் பப்பாளி வெள்ள தக்காளி பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். இவரின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications