முகூர்த்த நேரம் வந்துடுச்சு இன்னும் வரல.. ஓடி போயிட்டியா.. சம்யுக்தாவிடம் கணவர் இப்படி கேட்டிருக்காரே ப்பா!
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதன் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி வெளியானது. தொடர்ந்து கதைகள் கேட்டு படங்களில் கமிட்டாகிவருவதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில்தான் அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அதில் கலந்துகொண்டார்கள்.
பொறியியல் படித்துக்கொண்டிருந்தபோதே மாடலிங்கில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார் கோவையை சேர்ந்த சம்யுக்தா சண்முகநாதன். அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கோலிவுட் கதவுகளும் திறந்தன. அப்படி அவர் காரி, தனுசு ராசி நேயர்களே, குருமூர்த்தி, கொடுவா, மாணிக், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணி ரோலை ஏற்றிருந்தார். ஆனால் பெரிதாக அவரது ரோல் கவனம் ஈர்க்காமல் பத்தோடு பதினொன்றாக இருந்தது.
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி: அதேசமயம் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைப்படம் அவருக்கு நல்லதொரு தொடக்கமாகவும், நம்பிக்கையாகவும் அமைந்தது. அப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் கதைக்கு உதவும்படியும், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும் இருந்தது. இனிமேல் இது மாதிரியான ரோல்களில் நடித்து தன்னை ஃபீல்ட் அவுட் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.

திருமண வாழ்க்கை: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையின் காரணமாக இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். கணவரை பிரிந்த அவர் தனது மகனோடு சிங்கிளாக வாழ்ந்துவந்தார்.
அனிருதாவுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் சம்யுக்தாவுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற; இரண்டு வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதில் இரண்டு தரப்புக்கும் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். சம்யுக்தா போன்றே அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தாவின் முகநூல் பதிவு: திருமணமான அவர்கள் தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது கணவர் பற்றி சம்யுக்தா போட்டிருக்கும் முகநூல் பதிவு கலகலப்பை உண்டாக்கியிருக்கிறது. அவர் எழுந்தியிருக்கும் பதிவில், "என் திருமணத்துக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தேன். (மணப்பெண்ணுக்கு இது நியாயமானது என்று சொல்வேன்). முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதால் அனைவரும் என்னை பதற்றமாக அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
அனிருதா சொன்னது?: ஆனால் அனிருதா எனக்கு ஃபோன் செய்து சில்லாக, 'என்ன பிங்கி ஓடி போயிட்டியா? உன் திருமணத்துக்கே நீ தாமதமாக வந்தால் எப்படி?' என்று கேட்டார். அவர் அப்படித்தான். அவர் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சிரிக்க வைப்பார். எந்த அறைக்குள் நுழைந்தாலும் அதை வெளிச்சமாக்கிவிடுவார். அதற்காகத்தான் அவரை நான் இவ்வளவு காதலிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, அனிருதா ஸ்ரீகாந்த் என்றாலே நகைச்சுவைதான்; கிரிக்கெட் கமெண்ட்ரியிலும் இப்படித்தான் கலகலப்பாக பேசுவார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











