இன்னொரு திருமணமோ, கணவரோ முக்கியம் இல்லை.. சம்யுக்தா சண்முகநாதன் அதிரடி பேச்சு
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்தது. இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டு பேரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் சம்யுக்தா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே அதீத கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பொறியியல் பட்டதாரியான சம்யுக்தா சண்முகநாதன் முதன்முறையாக மாடலிங்கிற்குள் வந்தார். அதன் வாயிலாக அவருக்கு திரைத்துறை கதவுகளும் திறந்தன. அதன்படி காஃபி வித் காதல், வாரிசு, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அந்த படங்கள் பெரிதாக அவருக்கு ஹிட்டை கொடுக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க சம்யுக்தா சண்முகநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

விவாகரத்து செய்த ஜோடி: ஆனால் திடீரென அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். மகன் சம்யுக்தாவுடன் வாழ்கிறான். துபாயில் கார்த்திக்கிற்கு இன்னொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அதன் காரணமாகத்தான் அந்த விவாகரத்து நடந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. சம்யுக்தாவும்கூட ஒரு பேட்டியில் அதே தொனியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கை பிரிந்த அவர்; தன் மகன் மீதும், கரியர் மீதும் கவனத்தை செலுத்தி ட்ராவல் ஆனார்.
மலர்ந்த காதல்: அதனையடுத்து விஜே பாவனா மூலமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்; சம்யுக்தாவுக்கு பழக்கமானார். அந்தப் பழக்கம் காதலாக மாற; இரண்டு பேருக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்து முடிந்தது. சம்யுக்தா போன்றே அனிருதாவும் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு விவாகரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது திருமணம் சம்யுக்தாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனின் முன்னிலையில் நடந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
சம்யுக்தா பேட்டி: இந்நிலையில் சம்யுக்தா சண்முகநாதன் தனியார் பண்பலை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "அடுத்த திருமணமோ, பார்ட்னரோ தேவையே இல்லை. ஒரு பார்ட்னரோடு செட் ஆகவில்லை என்றால் பெண்களாகிய நாம், நம்முடைய உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை என அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்பு மாதிரி இப்போது பெண்கள் இல்லை. பெண்கள் நிறைய ரோல்களை எடுத்துக்கொள்ளும் சூழல் நிலவுகிறது.
எப்போதுமே பெண்ணுக்கான அடையாளம் அந்த பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும். அவரது பார்ட்னரின் அடையாளம் இருக்கக்கூடாது. வீட்டு வேலைகள் போன்ற பொறுப்புகளுக்குள் அவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு பெண்ணும் தனக்கான தனித்த அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
