சம்யுக்தா சண்முகநாதனின் முதல் திருமண வாழ்க்கை.. பிரபலம் என்ன இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த சூழலில்; கடந்த வருடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சம்யுக்தாவுக்கு ராயன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்யுக்தாவின் முதல் திருமண வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
சம்யுக்தா சண்முகநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. முக்கியமாக விஜய்யின் படங்களில் நடித்தால் எப்படியும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்றுதான் சினிமாவுக்குள் வந்த நடிகைகள் நினைப்பார்கள். அதன்படிதான் பெரும்பாலும் நடந்துவிடும். ஆனால் சம்யுக்தாவுக்கு அதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் சமந்தா: இப்போது திரைத்துறையில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வேண்டுமென்றால் பிக்பாஸில் கலந்துகொள்ளும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. சம்யுக்தா சில வருடங்களுக்கு முன்பே அதை செய்துபார்த்துவிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிக்பாஸ் டைட்டிலும் கிடைக்கவில்லை; அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் எதிர்பார்த்தபடியான அதிக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து நடித்துவருகிறார் சம்யுக்தா.

பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே முதலில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்தத் திருமணம் பெரியவர்களால் பார்த்து நடத்தி வைக்கப்பட்ட திருமணம். அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் விவாகரத்து செய்துவிட்டார்கள். டைவர்ஸ் வாங்கும்போது மகன் தன்னுடன் இருக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றியும் கொண்டார். மகனுக்கு ராயன் என்று பெயர்.
இரண்டாவது திருமணம்: கார்த்திக்குடனான பிரிவுக்கு பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் காதலில் விழுந்தார். அனிருதாவும் ஏற்கனவே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துவிட்டு விவாகரத்து பெற்றிருந்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து; அவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. இப்போது அவர்கள் நிம்மதியாக தங்களது வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சம்யுக்தாவின் முதல் திருமணம் பற்றிய பேச்சு திடீரென மீண்டும் கிளம்பியிருக்கிறது. பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோவில், "சம்யுக்தா சண்முகநாதன் முதலில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆன கையோடு துபாய்க்கு சென்றவர்தான். அதற்கு பிறகு கார்த்திக் வரவே இல்லை. இவரும் சில காலம் தனியாக இருந்துவிட்டு விவாகரத்து பெற்றுவிட்டார். அதனையடுத்து அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்துவிட்டார்" என்றார்.
முன்னதாக சில காலத்துக்கு முன்பு சம்யுக்தா கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "துபாயில் கார்த்திக் எனக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார். அதுதான் பிரிவுக்கு காரணம்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இரண்டு வீடியோக்களுமே சோஷியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











