அந்த விஷயத்தில் ஆண்களையும் விடமாட்டார்... முன்னாள் காதலனைப் போட்டுத்தாக்கும் சிம்பு ஹீரோயின்!

By

சென்னை: அந்த விஷயத்தில் ஆண்களையும் அவர் விடமாட்டார் என்று தனது முன்னாள் காதலன் பற்றி பரபப்பு புகார் கூறி இருக்கிறார், சிம்பு பட ஹீரோயின்.

Recommended Video

அடடா என்ன க்யூட்.. சனா சிங் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ

சிம்புவின், சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இந்தி நடிகை சனா கான்.

பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

நடன இயக்குனர்

நடன இயக்குனர்

இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வரும் சனா கான், இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார், சனா கான். இது பரபரப்பானது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அவர் கூறும்போது, நான் மெல்வினை முழுமனதாகக் காதலித்தேன். ஆனால் அவர் செய்த செயல்கள் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். மெல்வின் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அவர் யார் என்று தெரியும். ஆனால் அவர் பெயரை வெளியிடுவது சரியில்லை. மெல்வினிடம் இருந்து கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார்' என்று தெரிவித்து இருந்தார்.

இன்ஸ்டா மோதல்

இன்ஸ்டா மோதல்

.இதையடுத்து இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜாடையாக மோதிக்கொண்டனர். பின்னர் நேரடியாகவே சண்டையிட்டனர். பின்னர் சனா கூறும்போது, மெல்வின் என்னை உடல் ரீதியாக தாக்கினார். என் மண்டையில் ரத்தம் வடிந்திருக்கிறது. முகத்திலும் காயங்கள் இருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

பெண்பித்தன்

பெண்பித்தன்

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது அம்மா, மெல்வினை பார்த்ததுமே தவறான ஆள் என்று சொன்தாகத் தெரிவித்திருந்தார் 'வெறும் 20 நிமிடம்தான் சந்தித்தார், என் அம்மா. அவன் பெண்பித்தன் போல் இருக்கிறான், நண்பனாகக் கூட பக்கத்தில் சேர்க்காதே என்று கூறினார். அப்போது எனக்குத் தெரியவில்லை. பின்னர்தான் புரிந்து கொண்டேன்' என்று கூறியிருந்தார்.

இருபால் உறவு

இருபால் உறவு

இப்போது, மெல்வின், பாலியல் விஷத்தில் ஆண்களையும் விடமாட்டார் என்பதையும் தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார் சனா கான். அவர் இருபால் உறவுடையவர் என்பது எனக்கு லேட்டாகத்தான் தெரியவந்தது. அவர் பல சிறுவர்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்களை எனக்கு தெரியும். அவர்கள் பாந்த்ராவில் இருக்கிறார்கள். அவரது முன்னாள் காதலியும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: sana khan சனாகான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X