ஜாமீன் கிடைத்தது... மீண்டும், ‘மெண்டலில்’ நடிக்கத் தொடங்கினார் சனாகான்

மும்பை: இளம் பெண்ணை கடத்த முயற்சி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சனாகானுக்கு ஜாமீன் வழக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

தனது உறவினரின் காதலுக்கு உதவப் போய், கடத்தல் வழக்கில் சிக்கிக் கொண்டார் சனாகான். 15 வயது பெண்ணைக் கடத்த முயன்றார் என அப்பெண்ணின் பெற்றோர் தரப்பில் தரப்பட்ட புகாரின் பேரில் சனாகானை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதனை அறிந்த சனாகான் தலைமறைவானார். இதனால், படப்பிடிப்புகள் பாதியில் நின்றன.

நா நிரபராதி யுவர் ஆனர்...

நா நிரபராதி யுவர் ஆனர்...

இந்நிலையில் வழக்கில் இருந்து முன்ஜாமீன் கேட்டு மும்பை கோர்ட்டில் சனாகான் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தான் நிரபராதி எனவும், கடத்தல் முயற்சியில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மெண்டலில் தொடரும் நடிப்பு...

மெண்டலில் தொடரும் நடிப்பு...

மனுவை விசாரித்த நீதிபதி, சனாகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஜாமீன் கிடைத்ததை யடுத்து, தலைமறைவு வாழ்க்கையிலிருந்து, திரும்பி வந்த சனாகான், சல்மான்கானுடன் நடித்து பாதியில் நின்ற ‘மென்டல்' இந்தி படத்தில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

கலவரமான மாதம்....

கலவரமான மாதம்....

படப்பிடிப்பு மற்றும் ஜாமீன் விவகாரம் குறித்து சனாகான் தெரிவித்ததாவது, ‘ நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் கடந்த ஒரு மாதம் என்னை கலவரப்படுத்தியது. நான் கடத்தலில் ஈடுபட்டு இருந்தால் தாராளமாக தண்டனை ஏற்க தயார். அப்படிப்பட்ட பெண் அல்ல நான்.

நா ஏன் ஓடணும்...?

நா ஏன் ஓடணும்...?

மற்றவர் காதல் விஷயத்தில் அக்கறை எடுக்க அவசியம் இல்லை. காதலர்களை சேர்த்து வைக்கிற தொழில் பார்க்கவில்லை. நான் பயந்து தலைமறைவானதாக செய்திகள் வந்தன. நான் எங்கேயும் ஓடவில்லை. சில நாட்கள் போன் இணைப்பை துண்டித்து இருந்தேன்' என விளக்கமளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X