'உங்க அழகுக்கு அவர் சரிபடமாட்டார்...கவலைய விடுங்க..' காதலை முறித்த ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ்

By

சென்னை: காதலரை பிரிந்ததால் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ள நடிகை சனா கானுக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

Recommended Video

அடடா என்ன க்யூட்.. சனா சிங் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ

தமிழில், சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், சனாகான். பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த அவர், இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார்.

துரோகம் செய்தார்

நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார் சனாகான். இதை இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்து விட்டேன் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார் சனா கான்.

மன அழுத்தத்தில்

மன அழுத்தத்தில்

அவர் கூறும்போது, நான் மெல்வினை முழு மனதோடு காதலித்தேன். ஆனால் அவர் செய்தது அதிர்ச்சியாக இருந்தது. இதனால் காதலை முறித்துவிட்டேன். மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இது பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பரபரப்பானது. இதையடுத்து இவரும் ஜாடை மாடையாக சமூக வலைத்தளத்தில் மோதி வந்தனர்.

மன அழுத்தத்தில்

மன அழுத்தத்தில்

அவர் கூறும்போது, நான் மெல்வினை முழு மனதோடு காதலித்தேன். ஆனால் அவர் செய்தது அதிர்ச்சியாக இருந்தது. இதனால் காதலை முறித்துவிட்டேன். மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இது பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பரபரப்பானது. இதையடுத்து இவரும் ஜாடை மாடையாக சமூக வலைத்தளத்தில் மோதி வந்தனர்.

காதல் மோதல்

காதல் மோதல்

அவர் ஒரு வீடியோ பதிவிட்டால், பதிலுக்கு இவர் ஒரு கமென்ட் போடுவார். அவர் ஒரு மீம்ஸ் போட்டால், பதில் மீம்ஸை இவர் போடுவதாக இருந்தனர். இப்படியாக நடந்த இவர்களது காதல் மோதலை ரசிர்கள் கமென்ட் போட்டு ரசித்து வந்தனர். இந்நிலையில், தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சனா கான்.

உன் இயல்பே

ஒரு போட்டோவுக்கான கேப்ஷனாக, 'உன் இயல்பே உன் எதிர்காலம்' என தத்துவமாகக் குறிப்பிட்டுள்ளார். இதை, 'இது என்ன அவருக்கான மறைமுக அட்வைஸா?' என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், 'உங்க அழகுக்கும் அறிவுக்கும் அவர் சரிபடமாட்டார்... கவலைய விடுங்க சனா' என்று கூறியுள்ளார். இன்னொருவர், அடுத்து யாரை காதலிக்கப் போறீங்க? என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X