தொடர்ந்து அட்டாக் பண்றாரே... முன்னாள் காதலரை வீடியோ போட்டு வம்புக்கு இழுக்கும் பிக்பாஸ் நடிகை!

By

சென்னை: தனது முன்னாள் காதலரை விடாமல் அட்டாக் செய்து வருகிறார் அந்த பிரபல ஹீரோயின்.

Recommended Video

அடடா என்ன க்யூட்.. சனா சிங் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ

சினிமா நடிகர், நடிகைகள் காதலிப்பதும் பிரேக்கப் ஆனதும் சத்தம் போடாமல் இருப்பதும் சினிமாவில் சகஜம்.

சில காதல்கள் மட்டும் பொதுவெளிக்கு வந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் கூறி இருக்கின்றனர்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

நடிகை சனாகானின் காதலும் அப்படித்தான். சனா கான், தமிழில், சிம்புவின் சிலம்பாட்டம், பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பிரபலமானார்.

நடன இயக்குனர்

நடன இயக்குனர்

அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில் பிரிந்தனர். மெல்வின் தனக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும் அவர் செய்த செயல்களால் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார். அவர் வேறு பெண்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

இன்ஸ்டா மோதல்

இதையடுத்து இருவரும் இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்களால் மோதிக்கொண்டனர். பின்னர் நேரடியாகவே சண்டையிட்டனர். சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலியல் விஷயத்தில் மெல்வின், ஆண்களையும் விடமாட்டார் என்றும் அவர் இருபால் உறவுடையவர் என்பது லேட்டாகத்தான் தெரியவந்தது என்றும் கூறி இருந்தார்.

அவரைப் பார்த்து

அவரைப் பார்த்து

இது பரபரப்பான நிலையில் இப்போது, இன்ஸ்டாகிராமில் அவரைத் தாக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மங்கி என்பதற்கு இந்தியில் என்ன அர்த்தம் என்று கேட்கும் குரல் வருகிறது. அதற்கு ஒரு குழந்தையின் குரலில் பதில் சொல்லும் சனா, பந்தர் என்கிறார். புக் பார்த்துதானே சொன்னீங்க? என்று குரல் கேட்க, 'இல்லை, நான் அவரைப் பார்த்துதான் சொன்னேன்' என்று வெளியே கை காண்பிக்கிறார் சனா.

எப்படி மோசடி

எப்படி மோசடி

இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர். சிலர், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏன் மெல்வினுக்கு டிக் டிக், டெடிகேட் பண்ணிட்டு இருக்கீங்க?' என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், அதான் லவ் முறிஞ்சுட்டுல்ல, விட வேண்டியதான? என்று கூறியுள்ளனர். இந்த அழகான முகத்தை பார்த்து எப்படி மோசடி பண்ண ஆசை வந்தது அவருக்கு? என்று சிலர் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Read more about: sana khan சனாகான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X