Sanam: குட்டி டவுசரில் உடலை வளைத்து வளைத்து டான்ஸ்.. சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் குட்டி டவுசருடன் ஆட்டம் போட்டுள்ளார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சனம் ஷெட்டி கடந்த வாரம், ஜனநாயகன் படம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நான் விஜய்யின் ரசிகை, தளபதி படத்தில், எப்படியாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. இது விஜயினுடைய கடைசி படம் என்பதால் அந்த ஆசை வந்தது. ஆறு மாதமாக ரொம்ப முயற்சி செய்து, ஜனநாயகன் படத்தினுடைய ஒரு உதவி இயக்குனரின் போன் நம்பர் கிடைத்தது. அவர் மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவருமே இப்போ தருகிறேன், அப்போ தருகிறேன் என்று இழுத்து அடித்துக் கொண்டே வந்தார்.

நடிகை சனம் ஷெட்டி: மார்க்கெட்டில் உள்ள நடிகைகள் என்றால் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார்கள். நானும் நடிகை தான். மூன்று நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நிறைய படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறேன். மார்க்கெட் இல்லை என்றால் இப்படி அலைய வைப்பீர்களா? இது விஜய்க்கு தெரிய வாய்ப்பில்லை. இது அவருக்கு தெரிய வேண்டும் என்று தான் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கடந்த வாரம் இது நியாயமா இப்படி ஏமாற்றி விட்டார்களே என சொன்ன நடிகை சனம் ஷெட்டி, தற்போது, தனது இன்ஸ்டாகிராமில் குட்டி டவுசருடன் இடுப்பை வளைத்து குதூகலமாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வந்தாலும், ஒரு சிலர் பட வாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படி எல்லை மீறி ஆடலாமா என கேட்டு வருகின்றனர்.
அம்புலி படத்தில் அறிமுகம்: மாடல் அழகியான சனம் ஷெட்டி, மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து, தமிழில் அம்புலி என்ற படத்தின் என்ட்ரி கொடுத்தார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்ற இவர். பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியாவார். தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். எங்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்துவிட்டது. ஆனால், தர்ஷன் தற்போது பிரபலமாகி விட்டதால், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த தர்ஷன், நான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி, தன் முன்னாள் காதலருடன் சேர்ந்து விடிய, விடிய பார்ட்டி நடத்தினார். இதனால், நான் அவரைவிட்டு பிரிந்து விட்டேன், ஆனால், என்னை டார்ச்சர் செய்கிறார். தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் அப்போது பேசுபொருளானதால், பிரபலமான சனம் ஷெட்டி, பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி பிக் பாஸ் வீட்டில் 64 நாட்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











