Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிக்பாஸ் சீசன்-4ல் சனம் ஷெட்டி... சவால்களை எதிர்கொள்ள தயார் !
சென்னை: ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.
அம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. அதுமட்டுமல்ல, 2016-ஆம் ஆண்டிற்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்டு, மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினையும் வென்றுள்ளார்
கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள இந்த சமயத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கிய சனம் ஷெட்டி. பல நூறு குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
கடந்த வருடம் அவரை சுற்றி சில பிரச்சனைகள் சுழன்றடித்தாலும், அதையெல்லாம் தனது மன வலிமையால் எதிர்கொண்ட சனம் ஷெட்டி, தற்போது நுழையப்போகும் பிக்பாஸ் வீட்டிலும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால், தன்மீது அவதூறாக வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, தான் யார் என்பதையும் சனம் ஷெட்டி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
எதிர்வினையாற்று படத்தில் அலெக்ஸ் ஹீரோவாக நடித்து படத்தையும் தயாரித்து இருந்தார், அந்த படத்தில் பல வித முத்த காட்சிகள் இடம் பெறும் . குறிப்பாக உதடோடு உதடு லிப் லாக் செய்து பல காட்சிகள் மிகவும் வைரலாக பேசப்பட்டது. சனம் ஷெட்டி இதனால் பல சர்ச்சையான விமர்சனங்களையும் பெற்றார். இப்படி பல முத்தங்கள் மருத்துவ முத்தங்களாக மாறி சனம் ஆர்மி துவங்கப்படும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்ப்போம்.
ஒரு சிலர் சனமுக்கும் பிக் பாஸ் 4கும் எந்த சம்மந்தமும் இல்லை அவர் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் பொய்யானவை என்று சொல்லி வருகின்றனர். நாளை மாலை எல்லா சந்தேகங்களுக்கும் விடை தெரியும் என்று மிகவும் ஆர்வமாக பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.