பிக் பாஸ் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாக சொன்ன தர்ஷனின் காதலி
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சரியாக தெரிவித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
தர்ஷனும், அவரின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டியும் சேர்ந்து தான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்தார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தர்ஷனை மட்டுமே தேர்வு செய்தார்கள்.
அண்மையில் சனம் ஷெட்டியை அணுகி போட்டியாளராக வருமாறு அழைத்தார்கள். ஆனால் நிகழ்ச்சி துவங்கி இத்தனை நாட்கள் கழித்து போய் என்ன செய்ய முடியும் என்று நினைத்து சனம் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சனம் கூறியதாவது,

கெரியர்
வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நம் திறமையை வைத்து தான் கெரியர் உள்ளது. டைட்டிலை பெறாதபோதிலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோரால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடிந்தது. பிந்து மாதவி மற்றும் ஐஸ்வர்யா தத்தாவும் நல்ல படங்களில் நடித்து வருகிறார்கள்.

ஒப்பீடு
முந்தைய சீசன் போட்டியாளர்களுடன் தற்போதைய சீசன் போட்டியாளர்களை பார்வையாளர்கள் ஒப்பிடுகிறார்கள். முன்னாள் போட்டியாளர்களான ஓவியா, காயத்ரி, ரைசா ஆகியோருடன் தற்போதைய போட்டியாளர்களை ஒப்பிடுகிறார்கள். நாம் என்ன தான் நாமாக இருக்க முயன்றாலும் மக்கள் போட்டியாளர்களை யாருடனாவது ஒப்பிடுகிறார்கள் என்றார் சனம்.

ரித்விகா
சனா கூறியது மிகவும் சரி. டைட்டிலை வென்ற ஆரவ் மற்றும் ரித்விகா ஆகியோரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. ஆரவாவது ஹீரோவாகிவிட்டார். ரித்விகா தான் பாவம். பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் கெரியரை தூக்கிவிடும் என்று நினைத்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

புகழ்
பிக் பாஸ் வீட்டில் தங்குபவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல பெயர் கிடைக்கிறது. மற்றவர்கள் பெயரை கெடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின்போது நடந்து கொண்ட விதத்தை போட்டியாளர்கள் மறந்தாலும் பார்வையாளர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு அவ்வப்போது விளாசுகிறார்கள். பிக் பாஸ் மூலம் ஓவியா அளவுக்கு யாருக்கும் புகழ் கிடைக்கவில்லை. அவருக்கே அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கெரியர் பிக்கப் ஆகவில்லை.


Click it and Unblock the Notifications











