மாயாவை ஜெயிக்க வைக்க சூழ்ச்சி நடக்குதா?.. பிக் பாஸ் எடிட்டரையும் விட்டு வைக்காத சனம் ஷெட்டி!
சென்னை: அண்ணன் தங்கச்சியா ரெண்டு பேர் பழகினாலே அவங்களுக்கு லவ் டிராக் போட்டு விடுவார் பிக் பாஸ் எடிட்டர் என ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், ப்ரோமோவில் மட்டுமே கமல் பேசுவது ஃபயரா இருக்கும் எபிசோடில் மொக்கையாகிடும் என தொடர்ந்து ட்ரோல்கள் கிளம்பி வரும் நிலையில், அர்ச்சனா மாயா பற்றி பேசியதை பிக் பாஸ் எடிட்டர் கட் செய்து போட்டு விட்டார் என சனம் ஷெட்டி விளாசி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்டது. கிராண்ட் ஃபினாலே வாரத்துக்குள் போட்டியாளர்கள் நுழைந்து கேம் ஆடி வருகின்றன. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

7 வருஷமா ஒரே பரிசு: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து 7 சீசன்களை நிறைவு செய்யப் போகிறது. இன்னமும் பிக் பாஸ் டீம் 50 லட்சத்துக்கு மேல் பரிசுத் தொகையை அதிகரிக்கவே மாட்டோம் என்கிற முடிவில் திடமாக உள்ளனர். இந்த போட்டியாளர்களுக்கு எல்லாம் சம்பளமும் கொடுத்து இந்த பரிசுத் தொகை கொடுப்பதே அதிகம் தான் என்று நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.
திருப்தி இல்லை: பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில சீசன்களாகவே ரசிகர்களுக்கு பெரிய என்டர்டெயின்மென்ட் ஷோவாக இல்லாமல் பிஆர் டீம் வைத்திருக்கும் நபர்கள் மோதும் ஷோவாக மாறிவிட்டது. ஒரு சதவீதம் கூட ரியாலிட்டியே இல்லாமல் எல்லாமே செட்டப் செல்லப்பாவாக உள்ளது என கழுவி ஊற்றி வருகின்றனர். சீக்கிரம் இந்த சீசனை முடித்து விடுங்க என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைகிறது.
டைட்டில் வின்னர் யாரு?: இதுவரை அதிக ஓட்டுக்களுடன் அர்ச்சனா தான் முதல் இடத்தில் சேவ் ஆகி வருகிறார் என்றும் அவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீமே தொடர்ந்து மாயாவை கடைசி வாரம் வரை சேவ் செய்து வரும் நிலையில், கடந்த சீசனை போல கடைசியில் அசீமுக்கு டைட்டில் கொடுத்தது போல மாயாவுக்கு டைட்டில் கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
சனம் ஷெட்டி விளாசல்: அர்ச்சனா மாயாவை கழுவி ஊற்றியதை எல்லாம் விட்டு விட்டு கடைசியில் உங்க கேமை பார்த்து அட்மையர் ஆகிட்டேன் என அர்ச்சனா சொன்ன வார்த்தைகளை மட்டும் எபிசோடில் போடுறீங்களே எடிட்டரே இதெல்லாம் நியாயமா என சனம் ஷெட்டி பிக் பாஸ் எடிட்டரே மாயாவுக்கு ஆதரவாகத்தான் வேலை செய்கிறார் என விளாசி உள்ளார்.
வைல்டு கார்டு தான் பிரச்சனையா?: இந்த சீசனில் அர்ச்சனா மற்றும் தினேஷ் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த நிலையில், அவர்களுக்கு டைட்டில் கிடைக்க கூடாது என்றும் மாயாவுக்குத்தான் டைட்டில் கிடைக்க வேண்டும் என்கிற சதி நடக்கிறதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











