சூர்யா இதெல்லாம் பார்க்க மாட்டாரா?.. மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்.. சாடிய சனம் ஷெட்டி!

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வநாத்&சன்ஸ். அதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். மேலும் ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நேற்று படத்திலிருந்து முதல் சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியானது. ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து சனம் ஷெட்டி போல்டாக பேசியிருக்கிறார்.

சூர்யாவின் நடிப்பில் இந்த வருடத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படம் மொத்தம் 300 கோடி ரூபாய் வரை வசூலித்தது. சூர்யாவின் படம் பல நூறு கோடிகளை வசூலிப்பதை பார்த்து அவரது ரசிகர்கள், 'இதற்குத்தானே ஆசைப்பட்டோம்' என ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதே ஹிட் வைபை இனிவரும் காலங்களிலும் அவர் தக்க வைக்க வேண்டுமே எனவும் வேண்டியிருக்கின்றனர்.

Sanam Shetty Slams Vishwanath amp amp Sons Makers for Omitting Mamitha Baiju s Name From Poster
Photo Credit:

விஸ்வநாத்&சன்ஸ்: இதற்கிடையே கருப்பு படத்தில் கமிட்டான சமயத்திலேயே வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத&சன்ஸ் படத்தில் நடிக்கவும் கமிட்டானார். துல்கர் சல்மானை வைத்து வெங்கி இயக்கிய லக்கி பாஸ்கர் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே சூர்யாவுக்கும் அதே மாதிரி ஒரு தரமான ஹிட்டை கொடுப்பார் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார்.

Also Read
Nooru Sami Blue Sattai Maran Review - நூறு சாமி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. இப்படி ஆகிப்போச்சே!
Nooru Sami Blue Sattai Maran Review - நூறு சாமி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. இப்படி ஆகிப்போச்சே!

தமிழ், தெலுங்கில் பிஸி: தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை மமிதா பைஜு இப்போது சென்சேஷனல் நடிகையாக மாறிக்கொண்டிருக்கிறார். பிரேமலு, ட்யூட் ஆகிய திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. கர மட்டும் தோல்வியடைந்திருக்கிறது. அழகு மட்டுமின்றி அதீத திறமை வாய்ந்தவராகவும் திகழ்கிறார். விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படத்திலும் அவருக்கு வெயிட்டான ரோலே கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ட்ரெய்லரிலேயே தெரிந்தது. இவரும் தன்னுடைய அசத்தல் நடிப்பில் கலக்கியிருந்தார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: ராதிகாவும் ஒரு பேட்டியின்போது மமிதா பைஜுவின் நடிப்பை பார்த்து நான் அசந்து போய்விட்டேன். எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் அந்தப் பெண் அசால்ட்டாக நடித்துவிடுகிறார் என புகழ்ந்திருந்தார். இப்படி மமிதாவுக்கு ராதிகாவே ஹைப் ஏற்றியிருப்பதாலும் பெரிய எதிர்பார்ப்பு அவரது பெர்ஃபார்மென்ஸ் மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்திலிருந்து பட்டாம்பூச்சி என்ற முதல் சிங்கிள் வெளியானது. அந்தப் போஸ்டரில் அனைவரின் பெயரும் இடம்பெற்றிருக்க; மமிதாவின் பெயர் மட்டும் இல்லை. இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி காட்டமாக பேசியிருக்கிறார்.

சனம் ஷெட்டி கருத்து: அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "விஸ்வநாத்&சன்ஸ் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டரில் மமிதாவின் பெயரை ஏன் போடவில்லை. மற்ற அனைவரது பெயரும் இருக்கின்றன. அவர் பெயர் மட்டும் இல்லை. இது சரியில்லை. மமிதா பைஜு தனது திறமையால் அவரை நிரூபித்து இவ்வளவு பெரிய படத்தில் நடித்திருக்கிறார். புதிய நடிகையாக இருந்தாலும் சமமான மரியாதையை கொடுக்க வேண்டும். சினிமா துறை மாற வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்கள் இப்போதோ தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X