சிம்புவுடன் செல்ஃபி எடுத்த 'பிக் பாஸ்' தர்ஷனின் காதலி: வைரல் போட்டோ
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்து பேசி செல்ஃபி எடுத்துள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷன் தன்னிடம் ப்ரொபோஸ் செய்ததாக மீரா மிதுன் தெரிவித்தார். அது சுத்தப் பொய் என்பது சக போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் தெரியும்.

தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். இந்நிலையில் சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எடுத்த செல்ஃபியை சனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சிம்பு பற்றி சனம் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள். நம் தலைமுறையினருக்கு டிரெண்ட்செட்டிங்காக இருக்கும் படங்களை அளிக்கும் தி ஒன்ட் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார். அவரின் அறிவை பார்த்து வியக்கிறேன். சினிமா முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். உங்களை சந்தித்ததில் பெருமையாக உள்ளது டியர் சிம்பு என்று தெரிவித்துள்ளார்.
சனம் சிம்புவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை எஸ்.டி.ஆர். ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். சனம் அவ்வப்போது பிக் பாஸ் குறித்தும் போஸ்ட் போடுகிறார். பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதை பார்த்து சனம் ஷெட்டி பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருப்பது தனக்கு தெரியாது என்று மீரா கூறியது பொய்யே. தர்ஷன், சனம் ஷெட்டியுடன் சேர்ந்து கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மீரா மிதுனும் கலந்து கொண்டார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை மீரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டதை மறந்துவிட்டு பொய் சொல்லி வசமாக சிக்கியுள்ளார் மீரா மிதுன்.
எப்படியாவது தர்ஷனின் பெயரை கெடுக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மீரா. இந்நிலையில் யாரும் தர்ஷனிடம் வாலாட்ட முடியாது என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











