யம்மாடியோவ்.. நீச்சல் குளமே சூடாகிடுச்சே.. ’பாட்டல் ராதா’ நடிகையின் வேறலெவல் போஸ்!

சென்னை: நோட்டா, சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் சஞ்சனா நடராஜன் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு சஞ்சனா நடராஜன் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியாக பாட்டல் ராதா படத்தில் நடித்துள்ள சஞ்சனா அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

sanchana natarajan bottle radha heroine

வரும் டிசம்பர் 20ம் தேதி பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் பாட்டல் ராதா திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.

சஞ்சனா நடராஜனின் சினிமா வாழ்க்கை: நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் 2014ம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் உடன் பாக்ஸிங் மாணவியாக நடித்திருந்தார் சஞ்சனா நடராஜன். அதன் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனிலும் இவரே நடித்திருந்தார். 2018ல் வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0, டாப்ஸி நடித்த கேம் ஓவர், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடல், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடி என தொடர்ந்து கிடைக்கிற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

sanchana natarajan bottle radha heroine

நல்ல நடிகை: சார்பட்டா பரம்பரை படத்தில் லக்‌ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா நடராஜன் மலையாளத்தில் டியர் ஃபிரெண்ட் எனும் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கடைசியில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக போர் எனும் படத்திலும் இவர் நடித்திருந்தார். பாட்டல் ராதா படத்தில் குரு சோமசுந்தரத்துடன் போட்டி போட்டு நடித்திருப்பதாக கூறுகின்றனர்.

காதலர் அறிமுகம்: சஞ்சனா நடராஜன் தனது காதலர் பால் என்பவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி போட்டோவை வெளியிட்டு அறிமுகப்படுத்தி இருந்தார். கொரியோகிராஃபராகவும் குறும்படங்களில் நடித்து வருபவருமான பால் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார் சஞ்சனா நடராஜன். இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் சஞ்சனா வெளியிடவில்லை.

sanchana natarajan bottle radha heroine

நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக: நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு நீச்சல் குளத்தில் சாய்ந்து படுத்து போஸ் கொடுத்து ரசிகர்களையும் இணையத்தையும் சூடாக்கி வருகிறார் சஞ்சனா நடராஜன். படங்களில் சேலை அணிந்துக் கொண்டு ஹோம்லி லுக்கில் காட்சி தருபவரா இப்படி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புயலாக காட்சியளிக்கிறார் என ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X