திருவண்ணாமலையில் கிரிவலம்.. 14 கி.மீ., நடந்து சென்ற நடிகை சஞ்சிதா ஷெட்டி

சென்னை: ஜெயம் ரவி, தமன்னா நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சஞ்சிதா ஷெட்டி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் ஹீரோயினாக நடித்த சஞ்சிதா ஷெட்டி கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பல்லு படாம பாத்துக்கோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Sanchita Shetty done girivalam at Tiruvannamalai on Maha Shivaratri

அவருக்கு ஜோடியாக அட்டகத்தி தினேஷ் நடித்திருந்தார். யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் அந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தின் டைட்டிலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

சூதுகவ்வும் ஹீரோயின்: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி. அதுவும் விஜய்சேதுபதி கண்களுக்கு மட்டுமே தெரியும் அமானுஷ்ய ஹீரோயினாக இவரது கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், அந்த படத்துக்குப் பிறகு அவர் நடித்த எந்தவொரு படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

Sanchita Shetty done girivalam at Tiruvannamalai on Maha Shivaratri

பல்லு படாம பாத்துக்கோ: பீட்ஸா 2, ரம், பஹீரா என வரிசையாக பேய் படங்களையே விரும்பி நடித்து வந்தார் சஞ்சிதா ஷெட்டி. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பல்லு படாம பாத்துக்கோ படமும் ஹாரர் காமெடி வகையறா படம் தான். அட்டகத்தி தினேஷ், நண்டு ஜெகன் எல்லாம் நடித்து எந்தளவுக்கு படத்தை சொதப்ப முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பி இருந்தனர். ரெசிடன்ட் ஈவில் ஹீரோயின் மில்லா ஜோகோவிச் போல இவர் செய்த ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

Sanchita Shetty done girivalam at Tiruvannamalai on Maha Shivaratri

திருவண்ணாமலையில் கிரிவலம்: பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் பெரிதாக நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வெற்றிகளும் கிடைக்காமல் சஞ்சிதா ஷெட்டிக்கு மிஸ் ஆகி வருகிறது. மகா சிவராத்திரிக்கு தில்லாலங்கடியில் இவருக்கு அக்காவாக நடித்த தமன்னா ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்த நிலையில், இவர் திருவண்ணாமலையில் 14 கி.மீ., நடந்து கிரிவலம் செய்துள்ளார். அவரது வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X