திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற சஞ்சிதா ஷெட்டி.. இப்போ எங்கே போயிருக்காருன்னு பாருங்க!
சென்னை: கடந்த 2006-ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான முங்காரு மேல் படத்தின் மூலம் அறிமுகமானவர் சஞ்சிதா ஷெட்டி. கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்தவர் ஜெயம் ரவி, தமன்னா நடிப்பின் வெளியான தில்லாலங்கடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் அவருக்கு ஹீரோயின் அந்தஸ்தை வழங்கியது. சூது கவ்வும் படத்தை தொடர்ந்து பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், என்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ், வினோதய சித்தம், பகிரா மற்றும் பல்லு படாமல் பார்த்துக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்: பெரிதாக சினிமாவில் ஷைன் ஆகவில்லை என்றாலும் நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். சுமார் 5 லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். கடைசியாக அழகிய கண்ணே எனும் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். அதன் பின்னர் புதிதாக எந்த படத்தில் நடிக்கிறார் என்கிற எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
திருவண்ணாமலையில் கிரிவலம்: மகா சிவராத்திரி முன்னிட்டு நடிகைகள் தமன்னா மற்றும் பூஜை ஹெக்டே உள்ளிட்டோர் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரியை கொண்டாடினர். அதே நேரத்தில் திருவண்ணாமலையில் 14 கி.மீ., வெறும் காலில் நடந்து கிரிவலம் செய்தால் சஞ்சிதா ஷெட்டி. அந்த வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
கடற்கரையில் கால்நடையாக: அடுத்த தற்போது பீச்சில் நடிகை சஞ்சிதா ஷெட்டி ”கட்சி சேர” பாடலுக்கு வைப் செய்த காட்சிகளை செம க்யூட் ஆகவும் ரொமான்டிக்காக எடுத்து வெளியிட்டுள்ளார். சஞ்சிதா ஷெட்டியின் இந்த லேட்டஸ்ட் வீடியோ அதிக லைக்குகளை பெற்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கூந்தல் மீசை: கடற்கரை காற்றில் சஞ்சிதா ஷெட்டியின் கூந்தல் அவரது உதட்டுக்கு மேலே மீசை போல படரி விழும் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. ஏகப்பட்ட பேர் சஞ்சிதாவின் இந்த வீடியோவை பார்த்து ஹார்டின்களையும், கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜிக்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். கார்ஜியஸ் ஏஞ்சல் எனவும் ஹாய் சஞ்சி லுக்கிங் ஸ்டன்னிங் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கூடிய சீக்கிரமே இந்த ஆண்டு சஞ்சிதா ஷெட்டிக்கு ஒரு நல்ல படம் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











