மகளிர் கல்லூரி விழாவுக்கு சஞ்சிதா ஷெட்டி எப்படி போயிருக்காரு பாருங்க.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: தில்லாலங்கடி, சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து

விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் ஹீரோயினாக நடித்த சஞ்சிதா ஷெட்டிக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Sanchita Shetty visits Ethiraj women s college and shared the video

சூது கவ்வும் 2 படத்திலும் சஞ்சிதா ஷெட்டிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு புதுமுக நடிகை நடித்துள்ளார்.

சஞ்சிதா ஷெட்டி: கன்னட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சஞ்சிதா ஷெட்டி ஜெயம் ரவி, தமன்னா நடித்த தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் அவருக்கு ஹாலுசினேஷன் ஜோடியாக நடித்திருந்தார். நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூது கவ்வும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் 2ம் பாகத்தில் சிவா நடித்துள்ளார். நேற்று அந்த படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பல்லு படாம பாத்துக்கோ: சூது கவ்வும் படத்தைத் தொடர்ந்து பீட்ஸா 2, ரம், பஹீரா என வரிசையாக பல படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி. கடந்த ஆண்டு அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக பல்லு படாம பாத்துக்கோ படத்தில் நடித்திருந்தார். படத்தின் பெயரே ஒரு மார்க்கமாக இருந்த நிலையில், படமும் படுமோசமாக இருந்ததால் ஓடவே இல்லை.

திருவண்ணாமலையில் கிரிவலம்: 34 வயதாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி மகா சிவராத்திரிக்கு திருவண்ணாமலையில் 14 கி.மீ., நடந்து கிரிவலம் செய்திருந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டது.

எத்திராஜ் காலேஜ் விழா: இந்நிலையில், சேலை அணிந்துக் கொண்டு கம்ப்ளீட் ஹோம்லி கேர்ளாக மாறிய சஞ்சிதா ஷெட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

மோசமான கமெண்ட்ஸ்: சஞ்சிதா ஷெட்டி நடித்த படங்கள் மற்றும் சுச்சி லீக்ஸ் சமயத்தில் கசிந்த வீடியோ உள்ளிட்டவை பற்றி கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு நெட்டிசன்கள் மோசமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X