»   »  அந்த ஃபோட்டோ, வீடியோல இருக்கிறது நான் இல்லீங்க!!- மறுக்கிறார் நடிகை சஞ்சிதா

அந்த ஃபோட்டோ, வீடியோல இருக்கிறது நான் இல்லீங்க!!- மறுக்கிறார் நடிகை சஞ்சிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்த நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ தன்னுடையதல்ல என்று நடிகை சஞ்சிதா ஷெட்டி மறுத்துள்ளார்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், த்ரிஷா, டிடி, அனுயா, சஞ்சிதா, ஆன்ட்ரியா, அனிருத் போன்ற பிரபலங்களின் அந்தரங்கப் படங்கள் வெளியாகின. அவர்களைப் பற்றிய பல தகவல்களும் ட்விட்டாக வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர்.

Sanchitha Shetty denies nude pics and Video

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சுசித்ராவின் சர்ச்சைப் பதிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டது.

சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதன் காரணத்தையும் சுசித்ராவுக்கு நேர்ந்துள்ளது குறித்தும் அவருடைய கணவர் நடிகர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். கடைசியாக, சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

சுசித்ராவின் ட்வீட்களில் நடிகை சஞ்சிதா ஷெட்டின் நிர்வாண புகைப்படம் மற்றும் நிர்வாண வீடியோ ஒன்றும் வெளியானது.

இதுகுறித்து சஞ்சிதா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நேற்று முதல் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் நடப்பதை நான் அறிவேன். என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சமூக வலைத்தளத்தில் உலவும் புகைப்படம் என்னுடையதல்ல. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி," என்று கூறியுள்ளார்.

English summary
Actress Sanchitha Shetty has denied that she hasn't any connection with nude pics and video released yesterday in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil