குத்தாட்டம் போட கேட்ட சாண்டல்வுட்: கோபத்தில் பொங்கிய த்ரிஷா
சென்னை: சாண்டல்வுட் பற்றிய த்ரிஷாவின் கனவில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. கெரியரின் உச்சத்தில் இருந்தபோது கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்தார். பாலிவுட் பக்கம் சென்றவருக்கு தோல்வி தான் மிஞ்சியது.
இந்நிலையில் தான் அவர் சாண்டல்வுட் சென்றார்.

பவர்
த்ரிஷா புனீத் ராஜ்குமாருடன் சேர்ந்து பவர் என்ற கன்னட படத்தில் நடித்தார். படம் ஹிட்டாகிவிட்டது.

த்ரிஷா
முதல் கன்னட படமே ஹிட்டாகிவிட்டதால் சாண்டல்வுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம், வாய்ப்புகள் நிச்சயம் வரும் என்று எதிர்பார்த்தார் த்ரிஷா.

குத்தாட்டம்
ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்த்த த்ரிஷாவிடம் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வருகிறீர்களா என்று கன்னட திரை உலகினர் கேட்டார்களாம்.

கோபம்
முதல் படமே ஹிட்டாகியிருக்கின்ற நிலையில் குத்தாட்டம் போட அழைக்கிறார்களே என்று த்ரிஷா கோபத்தில் கொதித்துவிட்டாராம்.

என்னை அறிந்தால்
த்ரிஷா தற்போது அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தில் அவரது மனைவியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











