Spirit: எதையெல்லாம் சொல்லக் கூடாதோ.. அதையெல்லாம் சொல்வதா?.. தீபிகா படுகோனை திட்டிய சந்தீப் ரெட்டி வங்கா?
ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கவுள்ளார். முதலில் அந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் நடிக்கப் போவதாக இருந்தது. ஆனால், கடந்த வாரம் திடீரென தீபிகா படுகோன் விலகி விட்டார் என்றும் சந்தீப் ரெட்டி வங்கா அவரை வெளியே அனுப்பி விட்டார் என்றும் சர்ச்சைகள் வெடித்தன.
அதனை உறுதி செய்யும் விதமாக அதிரடியாக பல்வேறு மொழிகளில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் ஹீரோயினாக அனிமல் படத்தில் நடித்த திருப்தி டிம்ரி தான் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பையும் சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு 11.37 மணிக்கு சந்தீப் ரெட்டி வங்கா போட்ட ட்வீட் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மெகா ஐகானாக கொண்டாடப்படும் தீபிகா படுகோனை நேரடியாகவே விளாசித் தள்ளியிருக்கிறார் சந்தீப் ரெட்டி வங்கா என நெட்டிசன்கள் அவரது ட்வீட்டுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
அனிமல் பட இயக்குநர்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக தெலுங்கில் அறிமுகமானவர் தான் சந்தீப் ரெட்டி வங்கா. 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ஆதித்ய வர்மா என நடித்து சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமானார். அதே படத்தை இந்தியில் கபிர் சிங் என சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை ருசித்தார். அதன் மூலம் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திருப்தி டிம்ரியை வைத்து அனிமல் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அனிமல் திரைப்படத்துக்கு எதிராக பல இந்திய பிரபலங்களே கொந்தளித்தனர். அந்தளவுக்கு ஒரு சைக்கோத்தனமான படமாக அனிமல் இருந்தது என்று விமர்சிக்கப்பட்டாலும், ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடிய நிலையில், 900 கோடி வரை வசூல் செய்தது.

பிரபாஸின் 'ஸ்பிரிட்' படம்: சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக அனிமல் 2 படத்தை இயக்குவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தை முடித்துவிட்டு அவர் அனிமல் 2 படம் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் உடன் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்த தீபிகா படுகோன் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில், திடீரென தீபிகா படுகோன் வெளியேறியதாக பேச்சுக்கள் அடிபட்டன.
தீபிகா படுகோன் வெளியேற்றப்பட்டாரா?: அனிமல் படத்திலேலேயே ராஷ்மிகா மந்தனா மற்றும் திருப்தி டிம்ரியை வைத்து எந்தளவுக்கு போல்டான காட்சிகளை எடுக்க முடியுமோ சந்தீப் ரெட்டி வங்கா எடுத்து தள்ளியிருந்தார். திருப்தி டிம்ரி மற்றும் ரன்பீர் கபூர் படுக்கையறை காட்சிகள் எல்லாம் அனலை கிளப்பின. இந்நிலையில், தீபிகா படுகோனையும் அப்படி நடிக்க வைக்கப் போகிறார் என்றும் அதன் காரணமாகவே அவர் வெளியேறிவிட்டார் என்றும் சர்ச்சைகள் வெடித்தன. இன்னொரு பக்கம், தீபிகா படுகோன் போட்ட கண்டிஷன்கள் பிடிக்காமல் அவரை படத்தில் இருந்து சந்தீப் ரெட்டி வங்கா தான் என்றும் சில பேச்சுக்கள் அடிபடுகின்றன.

திட்டிய சந்தீப் ரெட்டி வங்கா: தீபிகா படுகோன் வெளியேறிய தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில், உடனடியாக திருப்தி டிம்ரி தான் ஹீரோயின் என அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் திருப்தி டிம்ரி உச்சகட்டமாக நடிக்கப் போவதாக சில மீடியாக்களில் செய்திகள் வெளியான நிலையில், தன்னுடைய கதை பற்றி வெளியே சொல்லக் கூடாது என அந்த நபரிடம் தெரிவித்து இருந்தேன். ஆனால், அந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்து விட்டார். 'டர்ட்டி பிஆர் கேம்ஸ்' மூலமாக வளர்ந்து வரும் இளம் நடிகையை அசிங்கப்படுத்தக் கூடாது என பதிவிட்ட அவர் இந்தியிலும் சில வார்த்தைகளை போட்டு திட்டியிருக்கிறார். தீபிகா படுகோனை தான் சந்தீப் ரெட்டி வங்கா திட்டியுள்ளார் என்றும் இதற்கு தீபிகா படுகோன் ரசிகர்கள் சந்தீப் ரெட்டி வங்காவை பதிலுக்கு திட்டி வருகின்றனர். தீபிகா படுகோன் எப்படி ரியாக்ட் பண்ணப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











