»   »  கண்ணாமூச்சி ஏண்டா?

கண்ணாமூச்சி ஏண்டா?

Subscribe to Oneindia Tamil

கண்டநாள் முதல் பட இயக்குநர் வி.பிரியாவின் அடுத்த படைப்புதான் கண்ணாமூச்சிஏண்டா கண்ணா. இதில் சத்யராஜுடன் சேர்ந்து சந்தியா, ராதிகா நடிக்கிறார்கள்.

மணிரத்தினத்தின் அசோசியேட்டாக இருந்தவர் பிரியா. தனியாக பிரிந்து வந்துகண்டநாள் முதல் என்ற அழகான படத்தைக் கொடுத்தார். இப்போது அடுத்தபடைப்புக்கு ரெடியாகி விட்டார். கண்ணாமூச்சி ஏண்டா கண்ணா என்றுவித்தியாசமான பெயரை படத்திற்கு வைத்துள்ளார் பிரியா.

படத்தின் ஹீரோ, ஹீரோயினாக சத்யராஜ், ராதிகா நடிக்கிறார்கள். நீண்டஇடைவெளிக்குப் பிறகு இருவரும் இணையும் படம் இது. ராதிகாவும் சிறியஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெரிய திரைக்கு வந்துள்ளார்.

பெருசுகள் படமோ என்று நினைத்து விட வேண்டாம். சந்தியாவும், பிருத்விராஜும்இன்னொரு ஜோடியாக படத்தில் உள்ளனர்.

சந்தியாவுக்கு இப்போது கை நிறையப் படங்கள். செல்வராகவன் இயக்கத்தில் இதுமாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தள்ளார். தெலுங்கில் ஒருபடம் உள்ளது. கூடல் நகரில் பரத்துடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இப்போது கண்ணாமூச்சி ஏண்டா கண்ணா படத்திற்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.நிறையப் படங்களில் கால்ஷீட் கொடுத்து விட்டதால் தேதி குழப்பம் வந்து விட்டதாம்.இதனால் ஒவ்வொரு இயக்குநரிடமும் வேகமாக எனது கேரக்டரை முடித்து விடுங்கள்என்று கெஞ்ச ஆரம்பித்துள்ளாராம் சந்தியா.

பெரியார் படத்தை முடித்து விட்ட சத்யராஜ் விரைவில் கண்ணாமூச்சி ஏண்டா கண்ணாஷூட்டிங்குக்கு வரவுள்ளார்.

முந்தையப் படங்களைப் போலவே இந்தப் படத்தையும் படு வித்தியாசமாக எடுத்துதமிழ் ரசிகர்களுக்கு விருந்தளிக்கப் போகிறாராம் பிரியா. படம் முழுக்க கலகலப்புசலசலக்குமாம்.

நல்லது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil