»   »  சந்து, சந்தியா, பளார்!

சந்து, சந்தியா, பளார்!

Subscribe to Oneindia Tamil

சந்தியாவை ராத்திரியில் ஒரு வாலிபர் விரட்டப் போக, அவரை சந்தியா சாத்தப் போக, சமீபத்தில் இப்படி ஒருபரபரப்பு நடந்து முடிந்திருக்கிறதாம்.

வடபழனிப் பக்கம் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் குடியிருக்கிறார் சந்தியா. சமீபத்தில் ஒரு நாள் அந்தி சாயும்மாலை நேரத்தில் வெளியே போயிருந்தவர், திரும்புகையில் இரவாகி விட்டதாம்.

வீடு பக்கம்தானே, நடந்தே போகலாம் என்று எண்ணிய அவர் அருகே இருந்த ஒரு சின்ன சந்துக்குள் புகுந்துபொடி நடையாக காலை வீசி நடக்க ஆரம்பித்துள்ளார். இருட்டு அவிழ ஆரம்பித்திருந்த நேரம் அது. சந்திலும்ஆள் அரவம் இல்லை.

தப்பு பண்ணிட்டோமோ என்று தனிமையைப் பார்த்து பயந்த சந்தியா, தம் பிடித்துக் கொண்டு வேகமாகநடையைக் கட்டினார். அப்போது அப்பக்கமாக வந்த ஒரு வாலிபர், திடீர் என சந்தியாவைப் பார்த்து ஷாக்ஆனார்.

ஆஹா, காதல் தேவதை இப்படி கால் வீசி தெருவில் நடக்கிறதே என்று மனசுக்குள் விசிலடித்த அந்த வாலிபர்,மினி நடை போட்டு சந்தியாவை ஃபாலோ செய்துள்ளார்.

இதை முதலில் அறியாத சந்தியா, எதேச்சையாக பின்னால் திரும்பிப் பார்க்க ஒரு மன்மதக் குஞ்சு தொடர்வதைஅறிந்து துனுக்குற்றார். இருந்தாலும் பயத்தை அடக்கிக் கொண்டு வேகமாக நடந்தார்.

கொஞ்ச நேரம் இந்தக் கூத்து தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் வேகம் ஏறிப் போன வாலிபர் வேகமாக ஓவர்டேக் செய்து சந்தியா முன் சம்மன் இல்லாமல் ஆஜராகி, ஆட்டோகிராப் ப்ளீஸ் என கேட்டுள்ளார். பயந்து போனசந்தியா போட முடியாது என்று கூறி விட்டு நடையை ஓட்டமாக மாற்றினார்.

விடாத வாலிபரும் சந்தியாவைத் துரத்தி ஆட்டோகிராப் போடும்மா என்று கேட்டுள்ளார். சந்தியா மறுக்கவேகையை பிடித்து இழுத்து கையெழுத்து போடு என மிரட்டியுள்ளார்.

அந்த சமயத்தில் சந்தியா தனது வீட்டை நெருங்கி விடவே, அந்த தைரியத்தில் அந்த வாலிபரின் கன்னத்தில் ஒருபளார் வைத்தாராம்.

இதைப் பார்த்துவிட்ட அபார்ட்மென்ட்டின் காவலாளியும் ஓடி வரவே அந்த இளைஞர் இருட்டில் ஓடிமறைந்துவிட்டாராம்.

அடப் பாவமே!

Read more about: sandhyas street experience
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil