»   »  ஜில்லுன்னு ஒரு வெயில்!

ஜில்லுன்னு ஒரு வெயில்!

Subscribe to Oneindia Tamil

மனதை இணைக்கும் வானவில் பாலம்தான் காதல். அந்தக் காதலை உணர்பவனே சராசரி மனிதன். அந்த உணர்வை அடையாதவர்களுக்கு மனதில்கோளாறு என்று அர்த்தம் என்கிறார் ராஜா. மஞ்சள் வெயில் படத்தின் இயக்குநர் இந்த ராஜா.

அகத்தியனிடம் பணியாற்றிய ராஜா இப்போது மஞ்சள் வெயில் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். காதலுக்காக கோட்டை கட்டியவர்அகத்தியன். அவரின் சிஷ்யனை மட்டும் விட்டு வைத்து விடுமா காதல்.? அதனால்தான் முதல் படத்திலேயே காதலை கருவாக வைத்துள்ளார்ராஜா.

பிரசன்னாதான் ஹீரோ. அவருக்கு ஜோடி சந்தியா. வெயிட் குறைத்து, புதுமெருகு ஏறி படு ஜில்லாக இருக்கிறார் சந்தியா. தொடர்ந்து காதல்சப்ஜெக்ட்களிலேயே நடித்து வரும் அசதி அவரது முகத்தில் தெரியவில்லை. மாறாக காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் அளவுக்கு காதல்கதைகளில் தேறி விட்டவரைப் போல தெரிகிறார் இந்த குட்டி தேவதை.

சொல்லுங்க ராஜா, மஞ்சள் வெயிலின் கதை என்ன?

ஆண், பெண் உறவு எப்போதுமே வண்ணமயமானது, இளைஞர்கள், இளைஞிகளின் மனதை இணைக்கும் வானவில் பாலம்தான் காதல். காதலைஉணராதவன் மனதில் கோளாறு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காதலின் வண்ணத்தையும், மணத்தையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும். இதுதான் சார் இந்தப் படத்தின் கதை என்றார் ராஜா.

இந்தப் படம், காதலுக்கும், காதலர்களுக்கும் ஒரு அடையாளமாக இருக்கும். காதலை இதற்கு முன்பு சொல்லியவர்களிடமிருந்து நான் சற்றேவித்தியாசப்பட்டு, புதுமையாக சொல்லியுள்ளேன் என்றும் கூறினார் ராஜா.

இப்படத்தில் நடிப்பதற்காக பிரசன்னா தனது ஹேர்ஸ்டைலை மாற்றி யூத் கெட்டப்பை கூட்டியிருக்கிறாராம். படம் குறித்து ராஜா மேலும்சொல்லும்போது, காதலர்களுக்கு விருந்தாக அமையும் மஞ்சள் வெயில்.

எனது சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டே திரைக்கதை அமைத்துள்ளேன். வழக்கமான காதல் கதையைத்தான் சற்றேவித்தியாசப்படுத்தி சொல்லியிருக்கிறேன் என்றார் ராஜா.

பேட்டியின்போது உடன் இருந்த பிரசன்னா கூறுகையில், பைவ் ஸ்டார் படத்துக்குப் பிறகு கல்லூரி மாணவன் கேரக்டபரில் நான் நடிக்கவில்லை.மஞ்சள் வெயில் படத்தில்தான் முதல் முறையாக ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கிறேன். இது எனக்குப் புது அனுபவம் என்றார்.

படத்தை சையத் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே வசந்த் இயக்கத்தில் சத்தம் போடாதே என்ற படத்தையும் தயாரித்துள்ளார். பரத்வாஜ்இசையமைக்கிறார். பா.விஜய் பாடல்களைப் புனைகிறார். அதியமானும் திரைக் கதை வடிவமைப்பில் ராஜாவுக்கு உதவியுள்ளாராம்.சுள்ளென்று இல்லாமல் ஜில்லென்று எடுங்கள், ராஜா!

Read more about: what is the colour of love

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil