»   »  உடல் கரைப்பில் சந்தியா!

உடல் கரைப்பில் சந்தியா!

Subscribe to Oneindia Tamil

பெருத்து விட்ட தனது உடம்பை குறைக்க கடுமையாக முயன்று வருகிறாராம் காதல் சந்தியா.

பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த சந்தியாவைக் கூப்பிட்டு தனது காதல் படத்தில் நாயகியாக்கினார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் நாயகியாக மாறினார் சந்தியா.

குள்ள உருவம், கள்ளப் பார்வை, குசும்புத்தனம் என அசத்திய சந்தியா, அந்தப் படத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்கவில்லை. மாறாக, விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான படங்களிலேயே நடித்தார்.

வல்லவனுக்குப் பிறகு சற்றே அதிக அளவில் சந்தியாவின் பெயர் அடிபட்டது. ஆனால் இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் புக் ஆகியிருந்த சந்தியா, திடீரென அதிலிருந்து கழற்றி விடப்பட்டு விட்டார்.

இந்த அப்செட்டில் இருந்து வரும் சந்தியாவுக்கு சமீப காலமாக இன்னொரு கடுப்பும் கூடச் சேர்ந்து கொண்டுள்ளது. அது உடல் பெருக்கம்.

படப் பெருக்கத்தையே காணோமே, இதுல இது வேறயா என்று கடுப்பாகியுள்ள சந்தியா, ஊதி விட்ட தனது உடம்பைக் குறைக்க ஜிம்மிலேயே பல மணி நேரம் வாசம் செய்து வருகிறாராம்.

கடுமையான உடற் பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறாராம்.

ஜிம் போக, மாதம் ஒருமுறை கேரளாவுக்கும் பறந்து போய் அங்கு ஆயுர்வேத மசாஜ் உள்ளிட்டவற்றையும் ஒரு கை பார்க்கிறாராம். அப்படியும், உடம்பு கரைந்தாற் போலத் தெரியவில்லையாம்.

சந்தியாவின் அம்மா ஒரு பியூட்டீஷியன். ஆனால் அவரால் வெளிப்புற அழகை மட்டுமே கவனிக்க முடிகிறது. மற்றபடி உடல் பெருக்கம், உப்பல் போன்றவற்றையெல்லாம் சந்தியாவேதான் கவனிக்க வேண்டும் என்று புலம்புகிறாராம் அவரது அம்மா.

கும்மம்மா என்று கேலி செய்யும் நிலைக்குப் போய் விடாமல், அம்மம்மா என்று எல்லோரும் ஆச்சரியப்படும்படி மாறிடுங்க சந்தியா, ப்ளீஸ்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil