»   »  மாட்லாடு மாட்லாடு சந்தியா

மாட்லாடு மாட்லாடு சந்தியா

Subscribe to Oneindia Tamil

மந்தார மலையாள சந்தியா, இப்போது சுந்தரத் தெலுங்கு மங்கையாக மாறியுள்ளார்.

காதல் என்ற ஒரே படம் மூலம் உச்சத்திற்குப் போன சந்தியா அதற்குப் பிறகு தமிழில் பெரிய ரவுண்டு அடிப்பார்என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக படு மந்தமான மார்க்கெட்டிலேயே இருந்து வருகிறார்.

இதற்கு முக்கியக் காரணம் சரியான படங்களை தேர்வு செய்யாததும், தமிழில் வந்த சில நல்ல வாய்ப்புகளைவிட்டு விட்டு மலையாளத்தில் நடிக்கப் போனதும் தான் காரணம் என்கிறார்கள்.

தமிழில் காதலுக்குப் பிறகு சந்தியா நடித்து டிஷ்யூம் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. வல்லவன், கூடல் நகர்ஆகிய படங்களில் ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தியா, அந்தப் படங்கள் எப்போதுவெளியாகும் என்ற சோக எதிர்பார்ப்பில் உள்ளார்.

இதற்கிடையே, காதலின் தெலுங்கு டப்பிங் பிச்சுக்கிட்டு ஓடவே, தெலுங்கில் சந்தியாவுக்கு மார்க்கெட்ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவே சந்தோஷமான சந்தியா இப்போது பவன் கல்யாணுடன்ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

காதல் படம் வெளியான புதிதில் ஆந்திராவுக்குப் போயிருந்த சந்தியாவுக்கு சுத்தமாக தெலுங்கு தெரியாது.தனக்குத் தெரிந்த நாலைந்து வார்த்தைகளை மாற்றி மாற்றிப் பேசி மணவாடுகளை டென்ஷன்படுத்தினார் சந்தியா.

அண்ணாவரம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்தபோது அவருடன் பேசவே யூனிட்டார் தயங்கினர். காரணம்அவ்வளவு அழகாக தெலுங்கை பிய்த்துத் துப்பினார் சந்தியா. இப்போது அவரது தெலுங்கைப் பார்த்து அசந்துபோகிறார்களாம் ஆந்திர சினிமாக்காரர்கள்.

குறுகிய காலத்திற்குள் தனது தெலுங்கு அறிவை சந்தியா மேம்படுத்திக் கொண்டது தான் இதற்குக் காரணம்.இப்போது தெலுங்கை, தெலுங்காகவே பேசி வருகிறாராம் சந்தியா.

திருப்பாச்சியின் ரீமேக் தெலுங்கில் தயாராகிறது. இதில் தமிழில் மல்லிகா நடித்திருந்த தங்கச்சி வேடத்தை சந்தியாசெய்கிறாராம். விஜய் வேடத்தை பவன் கல்யாண் செய்கிறார். அடுத்தடுத்து தங்கை வேடமாக வருவதால், கவலைஅடைந்துள்ள சந்தியா, இனிமேல் ஹீரோயினாக மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் வருவதெல்லாம் தங்கை வேடமாக இருப்பதால் குழம்பிப் போயுள்ளார் சந்தியா. இருப்பினும்இதுகுறித்து இப்போதைக்கு திட்டவட்டமாக முடிவை எடுக்க வேண்டாம். முதலில் துட்டை அள்ளுவோம்,அப்புறம் பாலிசியை முடிவு செய்வோம் என்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்துள்ளாராம் சந்தியா.

அப்படிலு போடுலு சந்தியாலு!

Read more about: sandhya busy in telugu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil