»   »  மாலை நேரத்து சந்தியா!

மாலை நேரத்து சந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தியாவுக்கு புது தமிழ்ப் படம் கிடைத்து விட்டது. செல்வராகன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். கூட ஜோடிப்போடுவது சூர்யாவின் தம்பி கார்த்தி.

காதல் சந்தியாவின் மார்க்கெட் தொடர்ந்து மந்தமாகவே இருந்து வருகிறது. காதலுக்குப் பிறகு அவர் நடித்து 2படங்கள் மட்டுமே வந்துள்ளன. முதலில் வந்த டிஷ்யூம் நன்றாகப் போனது. தீபாவளிக்கு வந்துள்ள வல்லவன்பின்ன ஆரம்பித்துள்ளது. பரத்துடன் நடிக்கும் கூடல் நகர் வளர்ந்து கொண்டுள்ளது.

இடையில் மலையாளத்திலும் தலையைக் காட்டி விட்டார் சந்தியா. இருந்தாலும் மற்ற நாயகிகளுடன்ஒப்பிடும்போது சந்தியா, இன்னும் பிந்தித்தான் இருக்கிறார்.

இப்போது அவருக்கு பிரேக் கொடுப்பது ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. செல்வராகவனின் இயக்கத்தில்சந்தியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது மாலை நேரத்து மயக்கம் என அப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்செல்வா.

செல்வாவின் படத்தில் ஹீரோக்களுக்கு மட்டுமல்லாது ஹீரோயின்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும்.எனவே இப்படம் தனக்கு பெரிய பிரேக்கைத் தரும் என பெரும் நம்பிக்கையில் உள்ளார் சந்தியா.

இதில் சந்தியாவுக்கு ஜோடியாக சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கவுள்ளார். இவர் நடித்த முதல் படம் பருத்திவீரன். அது எப்போது வரும் என்று தெரியாத நிலையில் அடுத்த படம் குதிர்ந்து விட்டது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களில் காதலைச் சொன்னசெல்வா, தனது புதுப்பேட்டையில் ரெளடித்தனத்தின் அரக்கத் தனத்தை புட்டு வைத்தார்.

ரெளடித்தனம் தனக்கு ஒத்துவராது என்பதை புரிந்து கொண்டாரோ என்னவோ, மீண்டும் ஒரு காதல் கதைக்குத்திரும்பியுள்ளார்.

மப்பு ஏறினாலும் மாலை நேரத்தில் மயக்கம் வரும். ஆனால் செல்வாவின் மாலை நேரத்து மயக்கம், அக்மார்க்அழகிய காதல் கவிதையாம்.

தற்போது வெங்கடஷ்ே, திரிஷா, ஸ்ரீகாந்த் (இவர் தெலுங்கு ஸ்ரீகாந்த்) ஆகியோரை வைத்து ஒரு தெலுங்குப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் செல்வா. இதை முடித்து விட்டதால் மாலை நேரத்துக்கு வருகிறாராம்.

நவம்பர் 3ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாக சொல்லியுள்ளார்கள். கல்லூரி மாணவர்களாக இதில்கார்த்தியும், சந்தியாவும் வருகிறார்களாம்.

இந்தப் படத்தைத் தயாரிப்பது ஒயிட் எலிபன்ட் நிறுவனம். இது செல்வா, யுவன் ஷங்கர் ராஜா, கேமராமேன்அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ள பட நிறுவனம்.

மாலை நேரத்து மயக்கம், காதல் பிரியர்களை மயக்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil